Tamilnadu

ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்த திருமாவளவன் அப்புறம் என்ன வெளுத்து எடுத்த ராமரவிக்குமார்!

https://www.tnnews24air.com/storage/gallery/lRZYa3cN822SJtZmU87KNzDUULmZthHiRw1cZFOM.jpg
https://www.tnnews24air.com/storage/gallery/lRZYa3cN822SJtZmU87KNzDUULmZthHiRw1cZFOM.jpg

தற்போது இருக்கும் சாந்தோம் சர்ச் முன்னொரு காலத்தில் காப்பாலீஸ்வரர் கோவில் இருக்கும் இடம் என திருமாவளவனும் தெய்வநாயகம் எனும் கிறிஸ்தவ பத்திரியாருமே ஒப்புதல் கொடுத்துள்ளனர் அப்புறம் என்ன என பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வெளுத்து எடுத்து இருக்கிறார் இந்தி தமிழர் கட்சியின் நிறுவனர் இராம ரவிக்குமார். இதுகுறித்து அவர் தெரிவித்த தகவல் பின்வருமாறு :-


இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை அயனாவரத்தை சார்ந்த தெய்வநாயகம் என்கின்ற கிறிஸ்தவ பாதிரியார் தலைமையில் நடைபெற்ற திருக்குறள் ஆராய்ச்சி நூல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தை திருமாவளவன் பேசிய பேச்சு சர்ச்சையாக மாறியிருக்கிறது.

"பொய்யான, தவறான விஷயங்களை பேசுதல் ஆவணப்படுத்துதல் பின்னர் அதை ஆதாரம் படுத்துதல் என்பது வரலாற்றுத் திரிபுவாதிகளின் வழக்கம்.அதைத்தான் பல ஆண்டுகளாக தெய்வநாயகம் என்பவர் செய்து வருகிறார்.!அந்த வரலாற்றுத்திரிபு திருட்டு வாதத்திற்கு திருமாவளவன் ஒத்து ஊதுகிறார்.

தெய்வப்புலவர் திருவள்ளுவர் மனிதர்களுடைய வாழ்வியலுக்கு தேவையான அறக்கருத்துக்களை மனித குலம் முழுமைக்கும் அருளியிருக்கிறார்.1330 குறட்பாக்கள் 133 அதிகாரங்கள் தந்திட்ட வள்ளுவரை ஞானஸ்நானம் பெற்ற பிறகுதான் திருக்குறள் தந்தார் என்று சொல்வது காந்தியும் நானும் ஒன்றாக கபடி விளையாடினோம் என்பது போல் இருக்கிறது.

கிறிஸ்தவம் தோன்றி 2021 ஆண்டு ஆகிறது.ஆனால் திருவள்ளுவர் ஆண்டு 2054 என்று சொல்லப்படுகிறது.அப்படியானால் கிறிஸ்தவம் தோன்றுவதற்கு முன்பே பிறந்த திருவள்ளுவர் எப்படி கிறிஸ்தவராக இருப்பார்?.இறை வாழ்த்து, வான்சிறப்பு ஆட்சியதிகாரம், அறவோர் பெருமை.....என பல பெருமைகளை சொல்லும் நூல் திருக்குறள்.

கடுகை துளைத்து ஏழு கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் என்றுஅவ்வைப் பிராட்டி பேசுகிறாள்.வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாரதி பேசுகிறான்.ஆராய்ச்சி கட்டுரை என்கின்ற அடிப்படையில்தவறான விஷயங்களை ஆவணப்படுத்தி அதை ஆதாரமாகக் கொண்டு பேசும் அயோக்கியத்தனத்தை செய்யக்கூடியவர்கள் மதபதட்டம் உருவாக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

திருவள்ளுவருக்கு திருநீறு பூசி உருத்திராட்சம் அணிவித்து காவி உடை போட்ட உடனேயே பார்த்தீர்களா திருவள்ளுவரை காவி மயமாக்க முயற்சிக்கிறார்கள் என்று கூக்குரல் போட்டவர்கள். இன்று திருவள்ளுவனுக்கு சிலுவை அணிவித்து ஞானஸ்நானம் கொடுத்துகிறிஸ்தவராக மதமாற்றம் முயற்சிக்கின்ற போது வாய் மூடி மௌனிகளாக இருப்பது ஏன்?

சைவர்களின் தலைமை கோயில் சிதம்பரம் நடராஜர் கோயில் ,முதல் கோயில் சென்னை மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயில்.இதைப் போர்ச்சுகீசியர்கள் இடித்து சர்ச் கட்டினார்கள்இன்று தெய்வநாயகம் திருமாவளவனும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்கள்.

சிதம்பரம் நடராஜர் கபால மாலை அணிந்து நடனமாடுகிறார். அவரும்இயேசுவின் வடிவம் என்று விளக்கம் கொடுக்கிறார்.முருகேஷ் லிங்கேஷ் சர்வேஷ் ரூபேஷ் போன்ற பல பெயர்களைக் கூட இவர்கள் வருங்காலத்தில் முருக இயேசு ,லிங்க இயேசு, சர்வ இயேசு ,ரூபஇயேசு என்று விளக்க உரை கொடுத்தாலும் கொடுப்பார்கள்.

சென்னை மாநகரம் தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மயிலாப்பூர் ஒரு கடலோர நகரமாக பெயர் பெற்றிருந்தது .Mylarphon நூலில் இது "மையிலார் பொன்" எனக் குறிப்பிட்டு இது வளம் மிக்கது, முக்கியத்துவம் கொண்டதுமான ஒரு இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்லவர் காலத்தில் இது ஒரு சிறப்பு பெற்ற துறைமுகமாகவும் விளங்கியது.16ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் போர்ச்சுகீசியர் ஆதிக்கம் ஏற்பட்டபோது இந்த இடத்தில் அவர்களுக்கான குடியேற்றம் ஒன்றை நிறுவ விரும்பினார்கள்.இதனால் மயிலாப்பூர் நகரத்தை கடற்கரையில் இருந்து உள்நோக்கி இன்றைய இடத்துக்கு நகர்த்தினார்கள்.

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் சமணம் எழுச்சியுற்று இருந்தபோது மயிலாப்பூரில் இச்சமயம் செழிப்புற்று இருந்தது.இப்போது சாந்தோம் தேவாலயம் இருக்கும் இடத்தில் ஒரு சமணப் பள்ளி இருந்ததாக கூறப்படுகிறது.இங்கே நேமிநாத தீர்த்தங்கரர் உருவம் வைக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிகிறது.

மயிலையில் இருந்த இந்த நேமிநாதர் மீது திருநூற்று அந்தாதி என்னும் நூலை அவிரோதி ஆழ்வார் என்பவர் இயற்றினார்.இதுதவிர திருக்கலம்பகம் மயிலாப்பூர் பத்து பதிகம் மயிலாப்பூர் நேமிநாத சுவாமி என்பனவும் இப்பள்ளி தொடர்பில் எழுந்தவை ஆகும் .

சமணக் கோயில் தொடர்பான தொல்பொருட்கள் பலவும் சாந்தோம் தேவாலயத்தை அண்டிய பகுதிகளில் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது.ஆதிநாதர் பிள்ளைத்தமிழ் என்னும் நூல் மயிலையில் இருந்த நகரம் என்னும் கோயிலைக் குறிப்பிடுகிறது.

இந்தக் கோவில் 1600 ஆண்டு கடலால் கொள்ளப்பட்டது.இந்தப் பகுதியில் நீண்ட காலமாக சைவம் மற்றும் வைணவ பிரிவுகள் சிறப்புற்று விளங்கின.பண்டைய கரையோர மயிலாப்பூரில் சிவனுக்கு பெரிய கோயில் ஒன்று இருந்ததற்கான சான்றாக 1250 ஆம் ஆண்டைச் சார்ந்த கல்வெட்டு ஒன்று இன்றைய கபாலீஸ்வரர் கோயிலில் இருப்பதாக கூறப்படுகிறது,

போர்ச்சுகீசியர் இக்கோயிலை அழித்து விட்டனர் இன்றைய கபாலீஸ்வரர் கோயில் 16 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.மயிலாப்பூரில் சிவநேசர் என்பவர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தார் இவர் சிவ பக்தராக இருந்தார். அவருக்கு பூம்பாவை என்ற மகள் ஒருத்தி இருந்தாள்.

சைவ சமயத் தொண்டு செய்யும் திருஞானசம்பந்தருக்கு தன்னுடைய மகளான பூம்பாவையை திருமணம் செய்து வைக்க சிவநேசர் எண்ணியிருந்தார்.தன்னுடைய ஏழாம் வயதில் ஒருநாள் பூம்பாவை தன்னுடைய தோழிகளுடன் மலர் பறித்துக் விளையாடிக் கொண்டிருந்தபொழுது பாம்பு ஒன்று தீண்டி இறந்து விட்டாள்.

திருஞானசம்பந்தர் திருமணம் செய்து வைக்க எண்ணி இருந்தமையால் தன்னுடைய மகளை இழந்த பின்னும் அவளுடைய எலும்பு மற்றும் சாம்பலை நீர்நிலைகளில் கரைக்காமல் பாதுகாத்து வந்தார் சிவநேசன்.திருவொற்றியூருக்கு திருஞானசம்பந்தர் வருவதை அறிந்த சிவநேசர், அவரை சந்தித்த சிவநேசர் தன்னுடைய மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து வைக்க எண்ணியதையும், ஆனால் அவள் சிறுவயதில் பாம்பு தீண்டி இறந்து விட்டதையும் தற்போது அவருடைய சாம்பல் மற்றும் எலும்பினை பாதுகாத்து வைத்திருப்பதையும் பற்றிக் கூறினார்.

திருஞான சம்பந்தர் "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை ...."எனும் பாடலைப் பாடி பூம்பாவையை சாம்பலில் இருந்து உயிர் பெற்று வரச் செய்தார்.ஏழு வயதில் இறந்த பூம்பாவை 12 வயதான பெண்ணாக உயிர் பெற்றாள்.இருப்பினும் தானே உயிர்கொடுத்த மையால் பூம்பாவையை திருமணம் செய்து கொள்ள இயலாது என ஞானசம்பந்தர் மறுத்துவிட்டார்.

அதன் பின்னர் பூம்பாவை சிவஇறைத் தொண்டு செய்து வாழ்ந்து வந்தார் என்று சைவத் திருமுறைகளில் சான்று சொல்லப்படுகிறது.இது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் பூம்பாவை சந்நிதி அமைந்துள்ளது.இந்த சந்நிதியின் கோபுரத்தில் பூம்பாவை உயிர் பெற்று எழும் நிகழ்வு சுதை சிற்பமாக உள்ளது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவத்தின் எட்டாம் நாளில் காலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதற்காக சம்பந்தர் பூம்பாவையை சிவநேசர் உற்சவர் சிலைகளை தீர்த்தத்தில் குளிப்பாட்டிய பிறகு குடத்தில் நாட்டு சர்க்கரையை  பூம்பாவையின் சாம்பலாக கொண்டு வருகிறார்கள்.

அதன்பின்னர் திருஞான சம்பந்தரின் பதிகம் ஓதப்படுகிறது.அதன்பிறகு பூம்பாவை உயிர் உடன் இருந்ததாக பாவனை செய்து நிகழ்வினை நிறைவு செய்கிறார்கள்.இதைக் கண்டால் நீடித்த பெருவாழ்வு தீர்க்காயுள் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.வான்புகழ் வள்ளுவருக்கு மயிலாப்பூரில் தான் திருக்கோயில் இருக்கிறது.

திமுக அரசு பதவியேற்ற உடனேயே அன்னை தமிழில் வழிபாடு என்று மயிலாப்பூர் திருக்கோவிலில் அரங்கேற்றம் நடத்தியது.ஆலய சொத்துக்களை நாங்கள் மீட்டு விட்டோம் என்று அனுதினமும் பேச்சு பேட்டி அறிக்கை என சுற்றித்திரியும் அறநிலையத் துறை அமைச்சர் திரு சேகர் பாபு அவர்கள் இடிக்கப்பட்ட இந்துக் கோயிலான மயிலாப்பூர் சிவன் கோயில் தற்போது இருக்கக்கூடிய சாந்தோம் பேராலயம் தான் என்று திருமாவளவனும் தெய்வநாயகம் போன்றவர்கள் சொல்லிய வரலாற்று ஆய்வின் படி எப்பொழுது மீட்கப் போகிறார் என்பதை இந்துக்கள் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவராக மதம் மாறிய பிறகுதான் திருக்குறளை தந்தார் என்று பொய் பிதற்றல்களை உண்மையாக்க முயற்சிக்கும் வரலாற்று ஏமாற்று திருட்டு கும்பலுக்கு திருமாவளவன் வக்காலத்து வாங்கிப் பேசுவதும், புத்தகம் வெளியிடுவது இவர் 

இந்து கோவில்கள் ஆபாச பொம்மைகளின் கூடாரம்,என்று பேசிய முந்தைய பேச்சுக்களையும் இதையும் இணைத்து பார்க்கத் தோன்றுகிறது.திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்றால் ஏன் கிறிஸ்தவ சர்ச்சுகளில் வாடிகனில் திருவள்ளுவருக்கு சிலை இல்லை.குறளில் திருவள்ளுவர் சிவபெருமான் பிரம்மா லட்சுமி பெருமாள்..... இப்படி பல தெய்வங்களுக்கு மரியாதை செய்து பாடியிருக்கிறார். அவற்றையெல்லாம் மதவெறி கொண்ட கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா?

இயேசுவே மெய்யான கடவுள் என்று சொல்லி பிற மத நம்பிக்கையாளர்களை கடவுளர்களை வெறுப்புணர்ச்சியோடு கொச்சைப்படுத்தி பேசும் இயேசுவின் ஏஜெண்டுகள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?அப்பமும் ஒயினும் கொடுத்து மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவர்களே! திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்றால் கள்ளுண்ணாமை என்கின்ற அதிகாரத்தை ஏன் படைத்தார்?

மது பழக்கம் கூடாது என்றுசொல்லும் திருக்குறளும் திருவள்ளுவரும் சொன்ன கருத்திற்கு எதிராக கிறிஸ்தவம் செயல்படுகிறதேஇதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?திருப்பலி நிகழ்வு நடத்தும் ஆயர் பெருமக்கள் திருக்குறள் வகுப்பை சர்ச்சுகளில் இதுவரை நடத்தி இருக்கிறார்களா?

இந்து திருக்கோவில்களில் வள்ளுவம் வாழ்க்கை வழிகாட்டி என்று பலரும் சொற்பொழிவு செய்யும் வழக்கம் இன்றும் இருக்கிறது.வள்ளுவரின் அடையாளத்தை திருநீற்றை முப்புரி நூலை அகற்றி அடையாள அழிப்பு செய்த அயோக்கியர்கள் தற்பொழுது இயேசு மதத்திற்கு தரகு வேலை பார்க்கிறார்கள்.இழந்த கோவில்களை மீட்க வேண்டும் இருக்கும் கோவில்களை காக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஆண்டவன் சொத்து ஆண்டவனுக்கே ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்போம் என்றுசொல்லும் அமைச்சர் சேகர்பாபு அவர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்துவார் என்று எதிர்பார்க்கிறோம்.இன்று கிறிஸ்தவ பேராலயம் ஆக செயல்படும் சாந்தோம் பேராலயத்தை கிறிஸ்தவ பாதிரியார்கள் தமிழக அரசிடம், இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்கப்பட்ட அந்த சிவன் கோயிலில் சிவலிங்கம் வைத்து வழிபாடு தொடங்க வேண்டும்.தேர்ப்பவனி கொடியேற்றம் பாதையாத்திரை பொங்கல் வைத்தல் கும்மி கொட்டுதல் என இந்து மத பழக்கங்கள் திருவிழா கொண்டாட்டங்கள் ஆகியவற்றை கிறிஸ்தவ மதத்தவர்கள் திருடுகிறார்கள்.

அதைப்போல திருவள்ளுவரின் அடையாளத்தை அழித்து கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் என்று ஆவணப்படுத்த முயற்சிக்கும் இந்த வரலாற்று திரிபு திருடர்களுக்கு இந்துதமிழர் கட்சியின் சார்பில் வன்மையான கண்டனங்கள்.இதுகுறித்து தமிழகத்தில் உள்ள சைவ சமயத்தின் ஆதீன பெருமக்கள், தமிழ் அறிஞர் பெருமக்கள் மற்றும் சிவனடியார்கள் ஓரணியில் திரண்டு திருக்குறளையும் திருவள்ளுவரையும், மீட்கப்படவேண்டிய மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில் - (இன்றைய சாந்தோம் சர்ச் )மீட்டிட வேண்டுமென்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் கோரிக்கையை முன்வைக்கிறோம்.

உலக சிவனடியார்களே ஒன்றிணைவோம்! திருவள்ளுவரை கிறிஸ்தவராக்க அனுமதியோம் என குறிப்பிட்டுள்ளார் இராம.ரவிக்குமார்.