மத்திய பாஜக அரசாங்கம் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளை வரலாற்றில் இல்லாத அளவு பெட்ரோலுக்கு 5 ரூபாயும் டீசலுக்கு 10 ரூபாயும் குறைத்து அதிரடியாக உத்தரவிட்டது இதை தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்கள் அதன் கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களிலும் பெட்ரோல் விலை கணிசமாக குறைந்து உள்ளது தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் பெட்ரோல் டீசல் விலை கணிசமாக குறைந்துள்ள காரணத்தால் தமிழக வாகன ஓட்டிகள் புதுச்சேரி நோக்கி படை எடுத்து வருகின்றனர் .
இந்த சூழலில் தனியார் சேனல் ஒன்று பெட்ரோல் மற்றும் கேஸ் விலை உயர்வு குறித்து சாமானியர்களிடம் பேட்டி எடுத்தது அதில் கடை உரிமையாளரிடம் பேட்டி ஒன்றை எடுத்தது அப்போது கடைகளுக்கு உண்டான கேஸ் விலை உயர்ந்து விட்டது உங்களுக்கு கஷ்டமாக இல்லையா என நிருபர் ஒருவர் கடை உரிமையாளரிடம் மைக்கை நீட்டினார் .
அதற்கு சிலர் எப்படியும் கடை உரிமையாளர் நிச்சயம் மத்திய அரசை திட்டுவார் என்று தான் எதிர்பார்த்து காத்து இருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது கடை உரிமையாளர் வெளுத்து எடுத்து விட்டார் , உலகம் கொரோனா எனும் இக்கட்டான சூழலில் சிக்கி இருக்க நம் நாடு 100 கோடி தடுப்பூசி போட்டுள்ளது .
இதற்கு காசு எங்கு இருந்து வந்தது? நாம் தான் கொடுக்க வேண்டும், வேறு யார் கொடுப்பது? உங்களுக்கு தெரியுமா? இப்போது இல்லை 2014 க்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் அப்போதே கேஸ் விலை 2000 வரை உயர்ந்தது இப்போது அரசு பல நலத்திட்டங்களை செய்வதால் நாம் பொறுத்து கொள்ளலாம் அதே நேரத்தில் GST மதிப்பிற்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டுவரலாம் என கேட்கிறது மத்திய அரசு அதை செய்தாலே போதும் என சாமானியர் கேட்க நிச்சயம் ஒரு நிமிடம் அதிர்ந்து போயிருப்பார் பேட்டி எடுத்தவர் .
அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக பொறுப்பு ஏற்ற பின்பு பெட்ரோல், டீசல் விலை உயர முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிடம் வாங்கிய கடனே காரணம் , இப்போது மோடி அதனை அடைத்து வருகிறார் பெட்ரோல் டீசல் விலையை GST மதிப்பிற்குள் கொண்டுவந்தால் நிச்சயம் விலை குறையும் அதற்கு தமிழக அரசு சம்மதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த தகவல்யாரை எட்டியதோ இல்லையோ சாமானிய மக்களை எட்டியுள்ளது என்பதுதான் இந்த பேட்டியின் மூலம் தெளிவாகியுள்ளது.