பாகிஸ்தான் நாட்டில் உள்ள சீக்கியர் கோவிலுக்கு பவழிபாடு நடத்த சென்ற பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பெரிய அண்ணன் என்றதும், அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டி பிடித்து சந்தோசத்தை வெளிப்படுத்தியது எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் உயிரை பறிகொடுத்த ராணுவவீரர்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விளையாட்டு வீரரும் தற்போதையா பாஜக எம்பி-யுமான கெளதம் காம்பிர் கடுமையாக சித்துவை விமர்சனம் செய்துள்ளார், இது குறித்து அவர் பேசியதாவது, இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர், நவ்ஜோத் சிங் சித்துவை கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து கம்பீர் கூறுகையில், ''பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வாவை கட்டிப்பிடித்து, கர்தார்பூர் சாஹிப் சென்று இம்ரான் கானை பெரிய அண்ணன் என்று அழைக்கிறார் சித்து. கடந்த ஒரு மாதத்தில் காஷ்மீரில் 40 பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து சித்து கருத்து எதுவும் கூறவில்லை.
இந்தியாவை பாதுகாக்க விரும்பும் மக்களுக்கு எதிராக அவர் செயல்படுகிறார். நவ்ஜோத் சிங் சித்து முதலில் தனது பிள்ளைகளை எல்லைக்கு அனுப்ப வேண்டும். அவரது பிள்ளைகள் ராணுவத்தில் இருந்திருந்தால், அவர் இம்ரான் கானை தனது பெரிய அண்ணன் என்று அழைத்திருப்பாரா? இதை விட வெட்கக்கேடான கருத்து சித்துவிடம் இருக்க முடியாது என கடுமையாக கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
சித்து இவ்வாறு பேசி 24 மணி நேரம் கடந்த நிலையிலும் காங்கிரஸ் தலைமை சித்து மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அக்கட்சி மீது இந்தியர்கள் கடும் அதிருப்தியை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
more news from tnnews24