திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களை தவிர்க்குமாரு அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுயிருந்தார் அதில், திரைப்படத்துறை விமர்சங்களை தவிர்ப்போம்! நம் இலக்கை நோக்கி பயணிப்போம்!! வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு வரும் திரைப்படங்களில் உண்மைக்கு புறம்பானக் கருத்துக்கள் வந்தால் அதை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எந்த தவறும் இல்லை.
சில இடத்திலே பாரதிய ஜனதா கட்சி, நம்முடைய கண்டனங்களை கடுமையாக பதிவும் செய்திருக்கின்றது. திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குநரின் கற்பனையின் வெளிப்பாடு அவர்கள் பார்த்த, படித்த மற்றும் கேள்விப்பட்ட சம்பங்களின் அடிப்படையில் ஒரு
திரைப்படம் உருவாகிறது. நமது கட்சியின் சகோதர சகோதரிகள், சிலநேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
கட்சியில் முக்கிய பதவியில் இருக்கும் யார் சொல்லும் கருத்தும் கட்சியின் கருத்தாக மாறுகின்ற சூழல் இருக்கிறது. அது நிறைய நேரத்தில் நமது கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது. எப்பொழுது, எதற்காக பேச வேண்டுமோ அப்பொழுது பேச வேண்டும். பேசக்கூடாத நேரத்தில், பேசுவதை தவிர்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம்.
நமது இலக்கு, நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு, நமக்கு முன் இருக்கும் சவால்கள் இவற்றை மனதில் கொண்டு கவனமாகச் செயல்படுங்கள்! எனவே திரைப்படத் துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள் கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். என்றும் தாயகப்பணியில் அண்ணாமலை என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த சூழலில் அண்ணாமலை அறிக்கை குறிப்பிட வருவது என்ன என்பது குறித்து எழுத்தாளர் சுந்தரராஜ சோழன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அதில், சினிமாவை விமர்சிக்கக் கூடாது என்று திரு.அண்ணாமலை சொல்லவில்லை.பொறுப்பில் உள்ளவர்கள் வெறும் சினிமா விமர்சனத்தை மட்டுமே செய்து கொண்டிருந்தால் பாஜக Vs சினிமா என மாறும்..
இதைச் செய்ய நிறைய பேர் உள்ளார்கள்.ஒரு கட்சி இதை மட்டுமே செய்யும் என்று மக்கள் மனதில் பதிய வைக்கக் கூடாது.எல்லா படமும் ஏதோ ஒரு வகையில் நம்மை புண்படுத்திக் கொண்டேதான் இருக்கும்..அதற்கு கட்சி கொந்தளிக்க ஆரம்பித்தால் 'அவசரப்பட்டுட்டியே குமாரு' என்ற நிலைதான் வரும்.
தேச விரோதிகள் எல்லாம் குவிந்து கிடக்கும் பாலிவுட்டை பற்றியே பாஜக பொறுப்பாளர்கள் கருத்து சொல்வதில்லை..கான்களை பற்றி எந்த விமர்சனமும் வைப்பதில்லை.ஆனால் பரிவார அமைப்புகள் பேசும்..ஹிந்துத்துவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பேசுவார்கள்.
இங்கே 'இந்து மக்கள் கட்சி' செய்ய வேண்டிய வேலையை பாஜக செய்ய வேண்டாம் என்று திரு.அண்ணாமலை சொல்கிறார் என குறிப்பிட்டுள்ளார் சுந்தரராஜ சோழன். சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் குறித்து பாஜக சிறுபான்மை அமைப்பை சேர்ந்த வேலூர் இப்ராஹிம் கருத்து தெரிவித்த நிலையில் அது பாஜகவின் கருத்தாக மாறியதால் அண்ணாமலை இவ்வாறு தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.