Tamilnadu

திராவிட செந்திலுக்கு புரியும் மொழியில் கொடுக்கப்பட்ட பதில் இது போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

Senthil tamil kelvi
Senthil tamil kelvi

திராவிடம் என்ற பேச்சை கேட்டால் ஆஹா ஒஹோ என துள்ளி குதிக்கும் நபர்கள் அரசியலில் இருப்பதை போன்று பத்திரிகை துறையிலும் இருக்கிறார்கள் என்றால் அதில் செந்திலை கூறலாம்.. தமிழ் மொழியை தாண்டி திராவிடத்தை புகழும் நிலைக்கு சென்றுள்ளார் செந்தில் என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் சமீபத்தில் வெளியான நிதி ஆயோக் பட்டியல் குறித்து செந்தில் தனது யூடுப் பக்கத்தில் கருத்து பதிவு செய்து இருந்தார்.


அதில் பீகார், உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் நிலையை விமர்சனம் செய்தார் இதற்கு எழுத்தாளர் சுந்தரராஜ சோழன் எப்படி செந்திலுக்கு சொன்னால் புரியுமோ அந்த மொழியில் பதில் கொடுத்துள்ளார் அது பின்வருமாறு :- காங்கிரஸ் ஒரு கேடுகெட்ட ஆட்சியை கொடுத்தது என்று சொல்லித்தான் 1967 ல் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது.ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டே வருடத்தில் மீண்டும் காங்கிரஸ்ஸோடு கூட்டணிக்குப் போனது..

1967 - 2021 வரை நடந்த திராவிட ஆட்சியில் அதிக அளவு ஆண்டது அதிமுகதான்,அதுவும் தொடர்ச்சியாக..கிட்டத்தட்ட 33 வருடம் ஆண்டுள்ளது.அதிமுகவை திராவிட கட்சி என்றே திமுக என்றும் ஏற்றுக் கொண்டதும் இல்லை..திராவிட கட்சியின் ஆட்சியில் நல்லது நடந்துள்ளது என்றால்? அது எம்ஜிஆர் - ஜெயலலிதா என்ற தனிப்பட்ட ஆளுமைகளால் மட்டுமே..


தமிழகத்தை தவிர்த்து இதில் சொல்லப்பட்டிருக்கும் மாநிலங்களை பற்றி நாம் ஏற்கனவே சொன்னதுதான்,பீஹாரில் பாஜக நேரிடையாக ஆளவே இல்லை நித்திஷ் குமாரோடு கூட்டணியில் உள்ளது அவ்வளவுதான்.நிதிஷ் ஆட்சி ஒரு 14 வருடமாக நடக்கிறது,பெரும்பங்கு அந்த மாநிலத்தை ஆண்டது காங்கிரஸ் அதன் பின் லல்லு யாதவ்..மத்திய பிரதேசத்தில் 18 வருடமாக பாஜக ஆட்சி நடக்கிறது.ராஜஸ்தானில் 16 வருடம் மொத்தமாக ஆண்டுள்ளது பாஜக.அதுவும் தொடர்ச்சியாக இல்லை.உபியில் 9 வருடம் ஆண்டிருக்கிறார்கள்,அதுவும் யோகி தலைமையிலான இந்த 4 வருடம்தான் வளர்ச்சியை நோக்கி நடைபோடும் ஆட்சி.

எங்கும் பாஜக 50 வருடமாக ஆளவில்லை..திமுகவின் கூட்டணி கட்சியும்,திமுகவின் பிரதமர் வேட்பாளரின் உரிமையுடைய கட்சியான காங்கிரஸ்தான் ஆண்டது..இப்படி சீரழிக்கப்பட்ட மாநிலங்களில் உண்மையான வளர்ச்சியை பாஜக ஆள்கிற போதுதான் தர முடிகிறது.தனிநபர் வாழ்வு எப்படி படிப்படியாக ஏற்றம் பெருகிறது அங்கேயென வெளிப்படையாகவே தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார் சுந்தரராஜ சோழன்.

சரி இன்னொரு கேள்வி பாஜக ஆளும் கோவா,கர்நாடக மாநிலங்களின் நிலை குறித்து ஏன் இந்த செந்தில் பட்டியல் கொடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது ஏன் என்றால் அவை பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பதால் செந்தில் மறைத்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.