Politics

என்ன இப்படி சொல்லிவிட்டார் சுஜாதா மொண்டால், திருமாவளவன் இனியாவது வாய் திறப்பாரா? இல்லை அடக்கி வாசிப்பரா?

என்ன இப்படி சொல்லிவிட்டார் சுஜாதா மொண்டால், திருமாவளவன் இனியாவது வாய் திறப்பாரா? இல்லை அடக்கி வாசிப்பரா?
என்ன இப்படி சொல்லிவிட்டார் சுஜாதா மொண்டால், திருமாவளவன் இனியாவது வாய் திறப்பாரா? இல்லை அடக்கி வாசிப்பரா?

தமிழகத்தை தாண்டி இந்தியாவில் பல்வேறு கொலை கொள்ளை, அரசியல் மோதல்கள், கற்பழிப்பு குற்றங்கள் என நடந்தால் முதல் நபராக கருத்து தெரிவித்து வருபவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மக்களவை MP திருமாவளவன், சமீபத்தில் கூட கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் உடனடியாக பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் எனவும் சீரியிருந்தார்.


இந்நிலையில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை காரணத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை ஆதரிப்பதில் கொள்கை கூட்டணி அமைத்து இருப்பதில் திருமாவளவனும் ஒருவர், அப்படி இருக்கையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுஜாதா மொண்டால், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார், இயற்கையாகவே பட்டியல் சமூகத்தினர் பிச்சைக்காரர்கள் எனவும் அவர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது, காசு வாங்கி கொண்டு பாஜகவிற்கு வாக்கு அளிக்கிறார்கள் என பேசியிருந்தார்.

மம்தா கட்சியை சேர்ந்த சுஜாதா மொண்டால் பேச்சிற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் கிளம்பியது, போராட்டங்கள் உருவாகியது, தேர்தல் பிரச்சாரம் செய்ய சுஜாதாவிற்கு தேர்தல் ஆணையம் தடையும் விதித்துள்ளது, இவ்வாறு நாட்டில் பரபரப்பாக சம்பவம் நடந்து இருக்க வாயை மூடி அமைதியாக எந்த கருத்தும் சொல்லாமல் இருக்கிறார் திருமாவளவன்.

பாஜக ஆளும் மாநிலங்களில் அல்லது பாஜகவினர் மூலமாக ஏதேனும் சிறு குற்றங்கள் நடந்தால் கூட, பெரிது படுத்தி பேசும் திருமாவளவன், அப்படமாக ஒரு சமூகத்தை தரக்குறைவாக விமர்சனம் செய்தும் அதை அவர் ஏன் கண்டிக்க கூட இல்லை என பலரும் திருமாவளவனை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் பல்வேறு தேசிய நிகழ்வுகளை செய்தியாக வெளியிடும் தமிழக ஊடகங்கள் பட்டியல் சமூக மக்களை சர்ச்சையாக விமர்சனம் செய்த சுஜாதா மொண்டால் கருத்து குறித்து வாய் திறக்காதது ஏன் எனவும் சந்தேக கண்ணோட்டத்தில் கேள்வி எழுப்ப படுகிறது. திருமாவளவன் அல்லது அவரது கட்சியை சேர்ந்த மூத்த அரசியல்வாதிகள் இனியாவது சுஜாதா கருத்திற்கு கண்டனம் தெரிவிப்பார்களா, இல்லை கொள்கை கூட்டணி என்பதால் தோழமை சுட்டுதல் என அடக்கி வாசிப்பார்களா எனவும் பலரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.