Politics

மே 2 பிறகு களம் இறங்குகிறது இராணுவம் !! இனி வீதிகளில் சத்தம் கேட்டால் டோப்போசா ஷாட் உறுதி !!

மே 2  பிறகு களம் இறங்குகிறது இராணுவம் !! இனி வீதிகளில் சத்தம் கேட்டால் டோப்போசா ஷாட் உறுதி !!
மே 2 பிறகு களம் இறங்குகிறது இராணுவம் !! இனி வீதிகளில் சத்தம் கேட்டால் டோப்போசா ஷாட் உறுதி !!

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் மிக அதிகமாக பரவி வரும் சூழலில், அதனை எதிர்கொள்ள மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர், கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதை முன்னிட்டு பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள், ஆலோசகர்கள் முன்னணி மருத்துவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.


இதையடுத்து நேற்று இரவு சரியாக 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றினார், அதில் முன்பை போலவே தற்போதும் நாம் கொரோனவை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் எனவும் தற்போது உலகிலேயே கொரோனா தடுப்பூசி இந்தியாவில் குறைவான விலைக்கு கிடைப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

நாட்டு மக்களுடன் தான் துணையாக இருப்பதாகவும், கடைசி ஆயுதமாக மட்டுமே பொது முடக்கத்தை மாநில அரசுகள் கையில் எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார், இந்த சூழலில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமரிடம் கொரோனா பாதுகாப்பில் ராணுவத்தினரை ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்.

90% ராணுவத்தினர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதாகவும், அவர்களை நோய் தொற்று தீவிரமாக இருக்கும் பகுதிகளில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பயன்படுத்தவும் பிரதமரிடம் ஆலோசனை கேட்டு இருக்கிறார்.

மேலும் நாட்டில் ஊடக சுதந்திரம் என்ற பெயரில் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக போலி தகவல்களை பேசும் நபர்களை சில ஊடகங்கள், சமூக வலைத்தள கணக்குகள் முக்கியத்துவம் கொடுத்து மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கவும் அதுபோன்ற நபர்களுக்கு உரிய படிப்பினை கொடுக்கவும் ராணுவத்தை பயன்படுத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும்.

கொரோனா இரண்டாவது அலை கைமீறி போகும் பட்சத்தில், அதனை எதிர்கொள்ள மே 2 ம் தேதிக்கு பிறகு துணை ராணுவம் பயன்படுத்த படலாம் என கூறப்படுகிறது,5 மாநில சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணியில் இருக்கும் ராணுவத்தினர் தேவை ஏற்படும் பட்சத்தில் பிரதமர் அனுமதி வழங்கினால் களம் இறக்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது என செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளன.

இராணுவம் வீதிகளில் களம் இறங்கினால், மன்சூர் அலிகான் போன்று கொரோனா தடுப்பூசிக்கு எதிராக போலி தகவலை பரப்ப முடியாது, எனவும் முக கவசம் அணியாமல் வெளிவருவது, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மீறுவது போன்ற செயல்கள் 95% குறையும் என கூறப்படுகிறது. இனி வீதிகளில் கொரோனா விதிமுறைகளை மீறி மன்சூர் அலிகான் போன்று கோஷம் எழுப்பினால் ராணுவத்தின்  டோப்போசா ஷாட் உறுதி

கடந்த ஆண்டு அமெரிக்க ராணுவம் நியூயார்க் நகரில் கொரோனா பாதுகாப்பு பணியில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது