Tamilnadu

பிபின் ராவத் மரணம் குறித்த செய்தி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் தமிழக ஊடகங்கள் ஏன்? !

bipin Rawat
bipin Rawat

தமிழக முன்னணி ஊடகங்கள் சில முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் இராணுவ அதிகாரிகள் விபத்தில் மரணம் அடைந்த நிகழ்வு குறித்தும் அதனை விசாரிக்க சென்ற தமிழக முதல்வர் பயணம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாக விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளன அவை பின்வருமாறு :-


தமிழக மீடியாக்கள் எவ்வளவு பெரும் முட்டாள்தனமான காரியங்களை செய்கின்றார்கள், உண்மையிலே அவர்களுக்கு அறிவு அவ்வளவுதானா? இல்லை மக்களை "திமுக" அரசோடு சேர்ந்து முட்டாள்களாக்குகின்றார்களா எனும் கோபம் நேற்று எழுந்தது?  ஆம், விழுந்து கிடந்தது இந்திய ராணுவ உச்ச தலைமை , அந்த விபத்தின் ஒரு குண்டூசியினை கூட தமிழக போலிசார் தொடமுடியாது, சிகிச்சைக்கும் ராணுவ மருத்துவவமே பொறுப்பு அதற்குள் மீட்பு பணியில் மு.க.ஸ்டாலின், சிகிச்சைக்கு ஸ்டாலின், தீயணைக்க ஸ்டாலின், ஓடுகின்றார் ஸ்டாலின், தூள் பறத்துகின்றார் ஸ்டாலின் என ஏகபட்ட ஒப்பாரிகள்.

இப்படி ஒரு கேவலமான அரசியலை உலகில் எந்த இடத்திலும் காணமுடியாது, இராணுவ விவகாரத்துக்குள் ஸ்டாலின் உற்றுகூட பார்க்கமுடியாது என்பதுதான் நிஜம், தேவை ஏற்பட்டால் கோவையின் எந்த மருத்துவமனையினையும் ராணுவம் தன் கட்டுபாட்டில் கொண்டுவர முழு உரிமை உண்டு. இதில் ஸ்டாலின் என்ன அனுமதி கொடுக்கவேண்டும் என்பதுதான் தெரியவில்லை?இப்படியும் டிவிக்களும் மீடியாக்களும் இருக்கும் தமிழகத்தை நினைத்தால் உண்மையிலே நெஞ்சு அடைக்கத்தான் செய்கின்றது, மிக மோசமான முட்டாள் கூட்டமாகிவிட்டார்கள்?

நல்ல வேலையாக பிபின் ரவாத் குடும்பத்துக்கு 10 கோடி அளித்தார் ஸ்டாலின் எனும் செய்திவரவில்லை, அதுவரைக்கும் அவர்களை கையெடுத்து வணங்கலாம் என ஆவேசமாக பதிவிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.  ஒரு சில முன்னணி ஊடகங்கள் நடந்த விபத்து குறித்து முழுமையான தகவல்களை சரியான முறையில் கொடுத்து வரும் சூழலில் சில ஊடகங்களின் செயல்பாடு முப்படை தளபதியின்  மரணம் குறித்த நிகழ்வில் பலத்த விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.