
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி, கனிமொழி, திருமாவளவன் ஆகியோரை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட குறும்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது, அதில் பக்தர் ஒருவர் முதலில் விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகரை வழிபட செல்கிறார் அப்போது விநாயகர் தன்னை களிமண் என்றவர்களுக்கு வாக்கு அளித்துவிட்டு தற்போது என்னிடம் வருவதா என களிமண்ணை கொண்டே அடித்து அனுப்புகிறார்.
அதன் பிறகு அதே பக்தர் முருகன் கோவிலுக்கு செல்ல கறுப்பர் கூட்டம் என்ற யூடூப் சேனல் ஒன்றில் முருகன் குறித்தும் கந்தசஷ்டி கவசம் குறித்தும் அருவருப்பாக பேசிய வீடியோ காட்சிகள் திரையில் தோன்றுகிறது, முருகன் குறித்து அவதூறாக பேசிய நபர்கள் ஆதரிக்கும் நபர்களுக்கு வாக்கு அளித்துவிட்டு இங்கு வருகிறாயா? என வேல் கொண்டே விரட்டி அடிக்கிறார் முருகன்.
அதன் பிறகு கனிமொழி பெருமாள் குறித்து பேசியதும் பின்பு தற்போதைய முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது இந்து திருமண சடங்குகள் அவதூறாக விமர்சனம் செய்தது என ஒரே குறும்படத்தில் அனைத்து காட்சிகளையும் இடம்பெற செய்துள்ளனர்.
இந்த குறும்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது, பலரும் இதனை அதிக அளவில் பகிர்ந்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர், கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி என ஒரு குடும்பமே பலவாறு இந்து மத சடங்குகள் குறித்து விமர்சனம் செய்து வந்தது இந்தே ஒரே குறும்படத்தில் இடம்பெற்று இருப்பது சாமானிய மக்களின் கவனத்தையும் பெற்றுள்ளது.
மொத்த குடும்பம் பேசியது குறித்து ஒரே குறும்படத்தில் தெரிவித்து இருக்கும் யார் இந்த குறும்படத்தின் இயக்குனர் என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர் வைரலாகும் குறும்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.