பிரதமர் மோடி ANI ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டிய நிலையில் பஞ்சாப் பயணம் குறித்து நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் இந்தியா முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது, இது குறித்து பிரதமர் மோடியின் ஆதரவாளர் பகிர்ந்து கொண்ட தகவல் பின்வருமாறு :-
இன்று பிரதமர் மோடி அவர்களின் பேட்டி தூர்தர்ஷன் செய்தி சானலில் ஒளிபரப்பானது! நாட்டிலுள்ள ஏறத்தாழ அனைத்து தொலைக்காட்சிகளும் அதை ஒளிபரப்பு செய்தன! 70 நிமிடங்கள் நீடித்த அந்த பேட்டியில் தனது அரசின் செயல்பாடுகள், கட்சியின் இலக்கு, நாட்டின் எதிர்காலம் என்று பேட்டி முழுவதும் எந்த வசைபாடுதலோ தற்புகழ்ச்சியோ இல்லாமல் தெளிந்த நிரோடைபோல இருந்தது. பேட்டிகண்ட ஸ்மிதா பிரகாஷ், பரபரப்புக்காக காரசாரமான கேள்விகள் எதையும் கேட்காததும் சிறப்புதான்.
இந்த மொத்த பேட்டியிலும், நெஞ்சை நெகிழவைத்த தருணம், பஞ்சாபில் பிரதமரின் பயணம் தடைபட்டது குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில்தான்! உங்கள் பயணம் தடைபட்டு, சாலையில் காத்திருக்க வேண்டி இருந்தபோது, உங்கள் மனதின் சிந்தனை ஓட்டம் எப்படி இருந்தது என்று பேட்டியாளர் கேட்ட கேள்விக்கு, பஞ்சாப் மக்களையும் அவர்களின் உபசரிப்பு, நட்பு பாராட்டல், உழைப்பு, வீரம், தியாகம் என்று பலவற்றை சிலாகித்துக் கூறிய பிரதமர்,
பா.ஜ.க.வின் செயல்வீரராக தாம் களமாடிய, பஞ்சாபில் தீவிரவாதம் தலைவிரித்தாடிய அந்த நாட்களில், ஒருசமயம் இரவு நேரத்தில் கட்சிப் பணியை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, தனது கார் பழுதடைந்ததையும், அருகிலிருந்த சர்தார்ஜி குடும்பம் அவருக்கு அடைக்கலம் கொடுத்து, தங்கள் வீட்டில் தங்கவைத்து, காலையில், காரை சரிசெய்து வழியனுப்பி வைத்ததையும் நன்றியோடு பகிர்ந்துக் கொண்டார்!
குஜராத், கட்ச்சில் பூகம்பத்தில் இடிந்துபோன குருத்வாராவை கட்டிக் கொடுத்ததற்காக மொத்த சீக்கியர்களும் தன்னிடம் இன்றும் நட்புடன் இருப்பதாகக் கூறி முடித்தார்!தனது கேள்விகான விடை கிடைக்கவில்லை என்பதற்காக, மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார் ஸ்மிதா. உங்கள் மனதின் ஓட்டம் என்னவாக இருந்தது?
இதற்கு பிரதமரின் பதில்:"அந்த நிகழ்வு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நேரத்தில் நான் எதுவும் பேசாமல் மௌனமாக இருப்பதே நல்லது. என்னுடைய வார்த்தைகளால் விசாரணைக்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாது!!"
பஞ்சாப் மற்றும் நான்கு மாநில தேர்தல் நிகழும் நேரத்தில், எந்தவொரு அரசியல்வாதியாக இருந்தாலும், இதுபோன்ற கேள்விகளுக்கு, புழுதியை வாரி இறைத்து, அனுதாபம்தேடி, ஆதாயம் அடையத்தான் பார்ப்பார்கள். அவர்கள் சராசரிகள்! ஆனால், பிரதமரோ ஸ்டேட்ஸ்மேன்! அதனால் அவர் அவ்வாறு செய்யவில்லை!
இந்த பதிலை கேட்டபோது எனது கண்கள் கலங்கிவிட்டன! இன்னும் எத்தனை தேர்தல்கள் வந்தாலும், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று திரண்டு வந்தாலும், இந்த மாமனிதரை தோற்கடிக்கவே முடியாது என்று மட்டும் தோன்றியது என குறிப்பிட்டுள்ளார். எனது கருத்து விசாரணையை மாற்றிவிட கூடாது என பிரதமர் தெரிவித்த ஒற்றை வார்த்தை அவர் யார் என்பதை மீண்டும் நிரூபணம் செய்துள்ளது.
More Watch Videos