Tamilnadu

“டெல்லி பார்முலா கையில் எடுத்த அமிட்ஷா இப்போ தெரிகிறதா தமிழகம் வந்தது ஏன் என்று“ மாப்பிள்ளை கைது”

amitsha, knnehru
amitsha, knnehru

நாடாளுமன்றத்தில் திமுக எம் பி கள் சிலர் கெத்து காட்டுவதாக நினைத்து மத்திய அரசிடம் மல்லுக்கு நின்ற சம்பவதால் இன்று ஒட்டு மொத்த தமிழக அரசியலே அடியோடு மாறி இருக்கிறது. தமிழகத்தில் பாஜக அதிமுக இடையே கூட்டணி அமைந்தது இரண்டு தரப்பிலும் பெரும்பாலான தொண்டர்களால் ஏற்று கொள்ள முடியாத நிலையை உண்டாக்கி இருக்கிறது அண்ணாமலை உழைத்த உழைப்பு எல்லாம் வீணாக போகும் எனவும் அடித்தளத்தை இழந்த அதிமுகவை பாஜக ஏன் கூட்டணி அமைத்து காப்பாற்ற வேண்டும் என பாஜகவினர் புலம்பி வருகின்றனர். 


மற்றொரு பக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் இனி சிறுபான்மை வாக்குகள் கிடைக்காது என கூறி அதிமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர் இந்த எதிர்ப்புகளை மீறி உள்துறை அமைச்சர் அமித்ஷாவே நேரடியாக தமிழகம் வந்து கூட்டணியை உறுதி செய்ய வேண்டிய அவசியம் என்ன என நாடு முழுவதும் பேசு பொருளாக இருந்து வருகிறது இந்த நிலையில் தான் பல முக்கிய விஷயம் வெளிவந்து இருக்கிறது இந்தியா முழுவதும் ஊழல் வாதிகளை சிறையில் அடைத்த பாஜகவால் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை எதுவும் செய்ய முடியவில்லை எனவும் ஊழல் வாதிகளை வேடிக்கை பார்ப்பது நாட்டிற்கு நல்லது இல்லை என பிரதமர் மோடிக்கு நேரடியாக தகவல் சென்றது. 

இதையடுத்து தமிழகத்தில் ஊழல் வாதிகள் மீது நடவடிக்கை எடுத்தால் அது அவர்களுக்கு அனுதாப அலையை தேடி கொடுப்பதாகவும் அதன் மூலம் எளிதில் வெற்றி பெறுகிறார்கள் எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது சட்ட ரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் வெற்றியை கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என மத்திய அரசின் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவரிடம் assignment கொடுக்கப்பட்டது. 

அவர்கள் மேற்கொண்ட ரகசிய சர்வேயில் திமுக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தற்போது அதிமுக பாஜக என வாக்குகள் பிரிவதால் நிச்சயம் திமுக வெற்றி பெரும் ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் திமுக தோல்வியை தழுவுவது மட்டுமல்லாமல் நாட்டின் முக்கிய நெட்ஒர்க் பிடிப்படும் எனவும் அழுத்தம் திருத்தமாக கூறி இருக்கிறார்கள். 

இதையடுத்து டெல்லி அழைக்கப்பட்ட அதிமுக தலைவர்களிடம் கூட்டணி சேர்வதன் பலன் மற்றும் பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டு இருந்தது மேலும் 15 நாட்களில் கூட்டணியை அறிவிக்க வேண்டிய தேவையும் விளக்கப்பட்டது அதன் அடிப்படையில் தான் நேற்றைய தினம் கூட்டணி உறுதி செய்யப்பட்டு இனி ஒருங்கிணைந்து செயல்பட புதிய திட்டமும் வகுக்கப்பட்டு இருக்கிறதாம் இது ஒரு புறம் என்றால் நேற்றைய தினம் பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்தது ஒட்டு மொத்த திமுக தலைமை மற்றும் கூட்டணி கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது. 

டெல்லியில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட கெஜீர்வாளை அம்மாநில மக்கள் தோல்வி அடைய செய்தனர் மேலும் சிறையில் கம்பி எண்ணவும் செய்தார் இந்த நிலையில் தான் முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ ஒன்றில் உதயநிதி மற்றும் சபரீசன் ஆகியோர் குறித்து பல லட்சம் கோடி சுருட்டி இருப்பதாக தெரிவித்தது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது அதன் மையப்புள்ளி மத்திய அரசிற்கு கிடைத்து இருக்கிறதாம் அதன் அடிப்படையில் விரைவில் உதயநிதி அல்லது சபரீசன் இருவரில் ஒருவர் கைது செய்யப்படுவது நிச்சயம் என்கின்றன டெல்லி வட்டாரங்கள். 

மதுரையில் கருப்பு மாஸ்க் அணிந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரதமரை வழி அனுப்பியதாக திமுகவினர் பேசி வந்த நிலையில் இப்போது கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு சரியாக இருக்கும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.பிரதமர் தொடங்கி பாஜக தலைவர்களை தர குறைவாக பேசிய திமுகவினர் இனி வரும் நாட்களில் கனவிலும் எதிர் பாரத வகையில் சிக்கலை எதிர்கொள்ள போகிறார்கள் என்று சிக்னல் கொடுக்கப்பட்ட நிகழ்வாக நேற்றைய நிகழ்வு உணர்த்தி இருக்கிறது.