Cinema

ஒரே பெயர் ஒட்டுமொத்த நிகழ்ச்சி கூடாரமும் கதறல் அதிலும் வாய்விட்டு சிரித்த சுகிர்தா முகம் போன போக்கு இருக்கே?

vinoba boopathy
vinoba boopathy

ஜெய்பீம் திரைப்படம் உண்டாக்கிய சர்ச்சை ஊடகங்கள் மூலம் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் மட்டுமல்ல சில ஊடகத்தில் பங்கேற்பாளர்கள் முக திரையும் கிழிந்து வருகிறது அந்த வகையில் தனியார் தொலைக்காட்சியில் நேற்று நடைபெற்ற விவாதம் முழுக்க முழுக்க ஒரு தரப்பை கடும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.


ஜெய்பீம் சர்ச்சை குறித்து நடைபெற்ற விவாதத்தில் பாமக செய்தி தொடர்பாளர் வினோபா பூபதி, வலதுசாரி சிந்தனையாளர் நித்தியானந்தம், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அருணன், பத்திரிகையாளர் என நாச்சியாள், திரைப்பட விமர்சகர் என கோடங்கி எனும் நபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விவாதத்தை சுகிர்தா தொடங்கி நடத்தினார் இதில் ஆரம்பம் முதலே நிகழ்ச்சியில் ஜெய்பீம் பட குழுவிற்கு எதிராக தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து கூற நினைத்த வினோபா பூபதி மற்றும் நித்தியானந்தம் ஆகியோர் கருத்திற்கு கடும் குருக்கீடுகள் கேள்விகள் என நெறியாளர் தரப்பிலும், பங்கேற்பாளர்கள் தரப்பிலும் கொடுக்கப்பட்டது.

இதை தாண்டி ஒரு கட்டத்தில் வன்னியர் அடையாளமான அக்கினி கலசம் படத்தில் இடம்பெற்றதும் தவறு அதை எடுத்து விட்டு அக்கினி கலசம் வைத்ததும் தவறு என தனது வேதனையை நித்தியானந்தம் முன்வைத்தார், அப்போது வினோபா பூபதியை தவிர நெறியாளர் சுகிர்தா, கோடங்கி, நாச்சியாள், அருணன் என பலரும் வேறு எந்த படத்தை தான் வைப்பது என கேலியாக சிரித்தனர்.

அப்போதுதான் ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்தார் வினோபா பூபதி,, எந்த படம்தான் வைக்கிறது என்ற கேள்விக்கு திருமாவளவன் படம்தான் வைக்கணும் என ஒரே போடாக போட்டார், அவ்வளவுதான் எந்த வாயெல்லாம் கேலி செய்து சிரித்ததோ அய்யயோ அது தவறு அப்படி சொல்ல கூடாது என முகம் மாறி கதற தொடங்கினர்.

இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது, திருமாவளவன் பெயரை சொன்னால் தவறு எனும் போது, அக்கினி கலசம், லட்சுமி புகைப்படம் வைப்பது தவறு என ஒரே பதிலில் புரிய வைத்துவிட்டார் வினோபா பூபதி, இப்போது பலருக்கும் அந்த காலண்டர் என்ன தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பது புரிந்து இருக்கும்.

மொத்தத்தில் எந்த மதத்தையும் சமூகத்தையும் இழிவு படுத்த கூடாது என்பது நெறியாளர்கள் பின்பற்ற வேண்டிய ஒன்று ஆனால் வன்னியர் அடையாளம் பயன்படுத்த பட்டது குறித்தோ அல்லது லட்சுமி புகைப்படம் வைத்தது குறித்தோ சகஜமாக கடந்து சென்ற சுகிர்தா போன்றோர் திருமாவளவன் பெயரை குறிப்பிட்ட போது மட்டும் கதறி கொண்டு தவறு என பேசியது சுகிர்தா போன்றோரின் முகத்திரையை கிழித்து காட்டியுள்ளது.

வினோபா பேசிய வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது.