24 special

அட ஆமா "உண்மைதான்" திமுக அடித்த பல்டி வெளியானது 4-க்கே இப்படி என்றால் 40 இருந்தால்? !

annamalai and stallin
annamalai and stallin

ஆளும் திமுக மற்றும் பாஜக இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது திமுக ஆதரவாளர்களே புலம்பி கொண்டு இருக்கிறார்கள், ஒரு சில திமுக அனுதாபிகள் அண்ணாமலையை பார்த்து திமுக பயப்படுகிறது என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் வைத்து வருகின்றனர்.


ஏன் திமுக எம்.பி. அப்துல்லா தனது முகநூல் பக்கத்தில் அன்றும் இன்றும் என்றும் எனக்குத் தெரிந்தது ஒரே ஒரு மந்திரம்தான்!! "Keep calm and trust M.K.Stalin" இந்த மந்திரம் பலிக்கிது என்ற உண்மை எச்.ராஜாவுக்கே தெரிஞ்சதாலதான் "Stalin is more dangerous than karunanithi" என்று பொலம்புகிறார்!!அமைதியாக இருங்கள்! முதல்வர் அய்யாவை முழுதாக நம்புங்கள் என ஆறுதல் தெரிவிக்கும் அளவிற்கு அண்ணாமலை செயல்பாடு பெரும் தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.

இந்த சூழலில் திமுக அடித்த பல்டிகளை பாஜகவினர் பகிர்ந்து வருகின்றனர் அது பின்வருமாறு :- ஒரே வருடத்தில்...... 1.பொங்கல் தொகுப்பு ஊழல்- பாஜக தலைவர் #அண்ணாமலை தலையீடு - "நடந்த தவருக்கு வருந்துகிறோம் ,விசாரணை குழு அமைக்கப்படும், சம்மந்த பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை" 

2.அரசு சார்பாக பொங்கல் இனிப்பு கொள்முதல் வெளி மாநில நிறுவனத்திற்கு வழங்கல்-பாஜக மாநில தலைவர்  #அண்ணாமலை தலையீடு- இனிப்பு ஒப்பந்தம் ஆவின் நிறுவனத்திற்க்கு வழங்கப்படும்"

 3. தருமபுரம் ஆதீனம் பல்லாக்கு தூக்க தடை -பாஜக மாநில தலைவர் #அண்ணாமலை -"பல்லக்கை தூக்க நானே வருவேன்"பல்லாக்கு தடை நீக்கம் - 

4. அன்னூர் அருகே தொழில் பூங்கா அமைக்க 3800 ஏக்கர் விவசாய நிலம் அரசு சார்பில் கையகப்படுத்தப்படும் - பாஜக மாநில தலைவர் #அண்ணாமலை- "TIDCO சார்பாக ஒரு செங்கல் கூட வைக்க பாஜக அனுமதிக்காது" -அன்னூர் தொழில் பூங்கா திட்டம் கைவிடப்படுகிறது. 

5.  திருவாரூர் ரத வீதிக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படும்-பாஜக மாநில தலைவர் #அண்ணாமலை  போராட்டம் "கருணாநிதி பெயரை வைக்கக் கூடாது "' சரி, வைக்க மாட்டோம்' இருக்கிறது 4 MLA வா இல்ல 40 MLA வாங்கிறது முக்கியம் இல்ல..அது எந்த கட்சிட்ட  இருக்குங்கிறது தான்...அத வச்சு என்ன நல்லது பண்றோம்கிறது  தான்...8% ஓட்ட வச்சிட்டே இவ்ளோ பண்றோம்ண்ணா ....ஆட்சிக்கு வந்தா. என்ன மாற்றத்தை கொண்டு வருவோம் என எண்ணி பாருங்கள் என பாஜகவினர் பட்டியல் போட்டு வருகின்றனர். மொத்தத்தில் இனி பாஜகவினர் தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாக மாறிவிட்டது தெரிய தொடங்கியுள்ளது.