Politics

யாரும் எதிர்பார்க்கவில்லை என்ன நடக்கிறது இராஜபாளையத்தில் திமுகவினர் புலம்பல் !!!

Minister rjb
Minister rjb

யாரும் எதிர்பார்க்கவில்லை என்ன நடக்கிறது இராஜபாளையத்தில் திமுகவினர் புலம்பல் !!!



தமிழக அரசியல்  களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள இந்த நேரத்தில் ராஜபாளைய தொகுதி திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் ,என்ன நடக்கிறது நமது தொகுதியில் என சென்னையில் உள்ள தங்கள் தலைமைக்கு  போன் போட்டு குற்றசாட்டுகளை அடுக்கும் நிலையில் பல அதிரடி மாற்றங்கள் நாளுக்கு நாள்  நடைபெற்று வருகிறது ..

தமிழக சட்டமன்ற  பொது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடம் முதல் பரபரப்பாக காணப்படும்  தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது ராஜபாளையம் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி களமிறங்கிய தொகுதி  என்பதால்  ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் கொண்ட தொகுதிகளில் ஒன்றாக ராஜபாளையம் மாறியுள்ளது ,

நேரடியாக அதிமுக மற்றும் திமுக மோதும் தொகுதிகளில் இதுவும் ஒன்று இந்த நிலையில் ராஜபாளையத்தில் என்ன நடக்கிறது என திமுகவினரே மிரளும் சம்பவங்கள் தொகுதியில் நடந்துள்ளன .தொடக்கத்தில் அமைச்சர் வெளியூர் வேட்பாளர் எனவும் திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் உள்ளூர் வேட்பாளர் எனவும் திமுகவினர் பிரச்சாரம் செய்தனர் .

ஆனால் நடைபெற்றது வேறு , தேர்தல் பிரச்சாரத்தை  தொடங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் தொகுதி எனது சொந்தகார தொகுதி என கூறி பிரச்சாரத்தை தொடங்கினார்  அன்றே ராஜபாளையம் தொகுதியில் உள்ள முக்கிய தலைவர்கள் பலரையும் நேரடியாக சந்தித்து ஊர் ஊரக ஆதரவு திரட்டியுள்ளார் .

பல இடங்களில் திமுகவை சேர்ந்த சிலரே சத்தமில்லாமல் அமைச்சருக்கு வேலை பார்க்க தொடங்கியுள்ளனராம் , அதை அடுத்துதான் எனக்கு அனைத்து  கட்சியிலும் நண்பர்கள் உள்ளனர் ,ஏன் திமுகவில் கூட எனக்கு நண்பர்கள் உள்ளனர் என அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருக்கிறார் .

இதையெல்லாம் அறிந்த திமுக தலைமை ராஜாப்பாளையத்தில் அமைச்சருக்கு எதிராக  வேறு வேட்பாளரை அறிவித்து இருக்கலாமோ  என யோசிக்கும் அளவிற்கு களத்தில் அதிமுகவினர் வீதி வீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

முதலில் அதிமுக திமுக இடையே சம பலமாக இந்த தேர்தல் இருக்கும் என்றே முக்கிய ஊடகங்கள் கணித்தன ,ஆனால் அமைச்சரின் செயல்பாடு தொகுதியில் அதிமுகவின் செல்வாக்கை மீண்டும் உயர்த்தியுள்ளது , 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே  வெற்றி தோல்வி இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் இந்த தொகுதி யில் தற்போதைய நிலவரப்படி அதிமுக வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறைந்தது 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என எதிர்க்கட்சியை சேர்ந்த பிரமுகர்களே பேசி வருகின்றனர் 

தொகுதி நிலவரம் இப்படி இருக்க திமுக வேட்பாளரோ அமைச்சர் கொண்டுவந்த திட்டங்களை எல்லாம் தான் தான் கொண்டுவந்தேன் என பேசி ஊர்மக்களின் எதிர்ப்பை சந்தித்து வருகிறாராம் ,பல ஊர்களில் கடந்த முறை திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தால் ஊருக்குள் செல்வதற்கே தடை போடப்பட்டுள்ளதாம் . மொத்தத்தில் ராஜபாளையம் இப்போது மஞ்சள் மயமாக மாறியுள்ளது .