தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது, அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர், அதிமுக, திமுக என இருக்கட்சிகளும் கூட்டணி அமைத்து சம பலத்தில் தேர்தலை எதிர்கொள்கின்றனர்.
மூன்றாவது அணியாக கமல் ஹாசன் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன, புதிய தமிழகம் தனித்து நின்று தேர்தலை சந்திக்கின்றது, இந்நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக 20 இடங்களில் போட்டியிடுகிறது, வேட்பாளர்கள் தேர்வில் கட்சியில் நீண்ட நாட்களாக பணியாற்றியவர்களுக்கு 80% முன்னுரிமையும், புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு 20% முன்னுரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜக கால் பதிக்க கூடாது என்பதற்காகவே இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் கொடுக்கும் இடங்களை பெற்று கொண்டதாக விசிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்து இருந்தன, இந்த நிலையில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலில் பாஜக எத்தனை இடங்களில் வெற்றி பெரும் என்பது பலத்த எதிர்பார்பாக உள்ளது.
பாஜக போட்டியிடும் தொகுதிகளான திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை வடக்கு, ஊட்டி, தளி ஆகிய 5 இடங்களில் பாஜக வெல்லும் வாய்ப்பு இருப்பதாக முதற்கட்ட கள நிலவரங்கள் டெல்லிக்கு சென்றுள்ளது, இதையடுத்து டெல்லியில் இருந்து மத்திய அமைச்சர்கள் குழுவினர் இந்த பகுதிகளில் இணைந்து பிரச்சாரம் செய்ய டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளாதம்.
அதுமட்டுமல்லலாமல் அரவக்குறிச்சி, ராமநாதபுரம், தாராபுரம், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு முறையாக கிடைத்தால் பாஜக வின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது, இதையடுத்து மேலும் குறிப்பிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தை தீவிர படுத்துவது மட்டுமின்றி தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய டெல்லியில் இருந்து தனி நபர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கபட்டுள்ளனராம்.
விரைவில் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பதே தற்போதைய கள நிலவரம் என செய்திகள் வெளியாகி கொண்டு இருக்க, பாஜகவிற்கு எதிர் அரசியல் செய்யும் கட்சிகள் அரண்டுபோய் உள்ளனர்.