திமுக தலைவர் ஸ்டாலின் இன்றைய தினம் திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுத்த நிலையில் அதற்கான காரணம் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6 அன்று அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது, இந்த நிலையில் மாநிலம் முழுவதும் பத்திரிகையாளர்கள், ஏஜென்சிகள், தனியார் அமைப்புகள் ஆகியோர் தேர்தலுக்கு பிந்தைய கள நிலவரம் குறித்து வாக்காளர்களிடம் கருத்து கேட்டு அதன் படி முடிவுகளை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்பு வைத்தனர்.
இந்நிலையில் தேர்தல் பணி முடிவடைந்த நிலையில் வியூகம் வகுக்கும் குழுவான ipac சென்னை அலுவலகத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார், அப்போது அவர் பிரசாந்த் கிஷோர், சென் ஆகிய இருவரிடமும் ஆலோசனை மேற்கொண்டார் ஸ்டாலின் உடன் அவரது மருமகன் சபரீசனும் உடன் இருந்தார்.
இந்தநிலையில் எதிர்பார்த்த அளவு வாக்கு பதிவு நடைபெறாதது, மற்றும் திமுகவின் கோட்டை என கருதப்படும் சென்னையில் வாக்கு பதிவு மிக குறைவாக இருப்பது ஆகிய காரணங்கள் திமுக தலைமையை அதிர்ச்சி அடைய செய்த நிலையில் இன்று அதிகாலை திமுக தலைவர் ஸ்டாலினுக்கு IPAC சார்பில் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் நினைத்த அளவு வெற்றி அமையவில்லை, அதிகபட்சமாக 130 தொகுதிகள் வரை உறுதி, அதே நேரத்தில் ஆ ராசா சர்ச்சை பேச்சு, இந்து மதத்திற்கு எதிரான கட்சி என திமுகவை 5% பொதுமக்கள் நினைப்பது எதிராக திரும்பியுள்ளது எனவும் முக்கியமாக அதிமுக பாஜக பாமக எதிர்ப்பு வாக்குகளை சீமானும், கமல் ஹாசணும் 9% அளவிற்கு பிரித்து இருப்பதாகவும், தென் மாவட்டங்களில் அமமுகவும் பிரித்து இருக்கிறார்கள் என ரிப்போர்ட் கொடுத்துள்ளார்கள்.
இது ஸ்டாலினை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறைந்தது 150 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே, பாஜகவிடம் இருந்து தனது MLA களை காப்பாற்ற முடியும் என ஸ்டாலின் நினைக்கிறார் ஆயிரம் விளக்கு. திமுக MLA குக செல்வம், திருப்பரங்குன்றம் MLA சரவணன் ஆகியோர் பாஜகவில் இணைந்தது ஸ்டாலினை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையடுத்து கட்சி சார்பில் நிலவரத்தை அறிய முக்கிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் ஆகியோருக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார், உண்மையில் என்ன நிலவரம் என வேட்பாளர்கள் உடன் கலந்துரையாடல் நடத்தவும், சந்தேகப்படும் வேட்பாளர்களை இப்போதே கண்காணிக்கவும் திமுக தலைவர் ஸ்டாலின் முடிவெடுத்து இருக்கிறாராம்.
தேர்தல் முடிவு ஒரு வேலை திமுக தலைமை எதிர்பார்த்த அளவு இல்லை என்றால் தனது கட்சி MLA களை பாஜக கைப்பற்றலாம் என்பதால் திமுக தலைமை இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளதாம் பல கருத்து கணிப்பு முடிவுகள் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிப்பதால் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு திமுக உள்ளதாம், இதே நிலை நீடித்தால் ஸ்டாலின் முதல்வர் கனவு கனவாகவே முடியலாம் என கூறப்படுகிறது.