தெற்குதொகுதியில் பா.ஜ.க வெற்றி பெறுமா, கமலின் ம.நீ.ம.,வெற்றி பெறுமா, என்று ஓட்டுபதிவு சதவீதத்தை வைத்து, அரசியல் கட்சியினர் கணக்கு போட்டு வருகின்றனர்.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 'கோவை தெற்கு தொகுதியில், 60.72 சதவீத ஓட்டு பதிவாகியுள்ளது. 2016ம் ஆண்டை விட இது, 1.19 சதவீதம் குறைவு. கோவை தெற்கில் குறைந்த சதவீத ஓட்டுக்களே பதிவாகியுள்ளன.
ஓட்டு சதவீத அடிப்படையில், யாருக்கு வெற்றி இருக்கும் என, அரசியல் கட்சியினர் ஆலோசிக்க துவங்கி விட்டனர்.இரண்டு திராவிட கட்சிகளும், நேரடியாக இத்தொகுதியில் போட்டியிடாத சூழலில், கமலின் ம.நீ.ம.,வுக்கும், பா.ஜ.க வின் வானதி சீனிவாசனுக்கும் இடையேதான், கடும் போட்டியிருக்கும் என்பதே, அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
ஆனால் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வாக்கு சதவிகிதம் குறைவாக இருப்பதும், பாஜகவிற்கு செல்வாக்கு உள்ள இடங்களில் வாக்கு சதவிகிதம் அதிகரித்து இருப்பதும், கோவை தெற்கின் கள நிலவரம் என்ன என்பதை மறைக்காமல் சொல்லவிட்டதாம்,திமுக கூட்டணி தற்போது அதிமுக கூட்டணியை காட்டிலும், சீமான், கமல் மீது கடும் கோபத்தில் உள்ளதாம்.
அதற்கு முக்கிய காரணம் முதல் முறை வாக்காளர்கள் பலர் சீமான் கமல் கட்சிகளுக்கு வாக்கு அளித்துள்ளனர், இந்த வாக்குகள் திமுக கூட்டணிக்கு செல்ல கூடிய வாக்குகள் எனவும் அதிமுகவிற்கு எதிராக உள்ள இந்த வாக்குகளை திமுக கூட்டணி அறுவடை செய்யாமல் சீமான், கமல் ஆகியோர் பிரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பல இடங்களில் வெற்றி தோல்வி பட்டியல் மாறலாம் எனவும் குறிப்பாக திமுகவிற்கான வெற்றி வாய்ப்பு குறையலாம் என்பதால் திமுக அதிமுக கூட்டணியை காட்டிலும் தற்போது சீமான், கமல் மீது கடும் விரக்தியில் இருக்கிறதாம்.