Tamilnadu

செந்தில்பாலாஜி ஜோதிமணி மோதலுக்கு உண்மையான காரணமே வேறு? இனி தான் இருக்கு கச்சேரி!

Senthil Balaji
Senthil Balaji

கரூர் மாவட்ட ஆட்சியர் தான் மத்திய அரசிடம் முறையிட்டு தனது நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு பெற்று வந்த நிதி உதவி திட்டத்தை நடத்த அனுமதி அளிக்கவில்லை என்றும், கரூர் நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வரும் மற்ற மாவட்ட ஆட்சியர்கள் நிவாரண நிகழ்ச்சி வழங்க ஒப்புதல் அளித்த பின்பும், கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனுமதி ஏன் அளிக்கவில்லை என கூறி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளார் ஜோதிமணி.


இதற்கு பதில் அளித்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு ஷங்கர், மாற்று திறனாளிகளுக்கான முகாம், அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஒட்டுமொத்த விழாவாக நடைபெற இருக்கிறது மேலும் மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும் பொருள்களுக்கு தேவையான நிதியை மாநில அரசு நிதியில் இருந்தே வழங்குகிறோம் என குறிப்பிட்டு இருந்தார்.

அதாவது மத்திய அரசு நிதி என்பதால் தானே நீங்கள் வாங்கி வந்த நிகழ்ச்சி என கூறுகிறீர்கள் அப்படி எதுவுமே வேண்டாம் நாங்கள் மாநில அரசு நிதியில் இருந்து நிகழ்ச்சியை நடத்த போகிறோம் உங்களுக்கு அனுமதியும் இல்லை என சொல்லாமல் சொல்லிவிட்டார் கரூர் கலெக்டர்.

இது வெளிப்படையாக தெரிந்த விஷயம் என்றாலும் தெரியாத விஷயம் செந்தில் பாலாஜி ஜோதிமணி மோதல்தான் அதிலும் கரூரில் இப்போது ஜோதிமணி பெயர் போட்ட எந்த நிகழ்ச்சிக்கும் செந்தில் பாலாஜி செல்வது கூட இல்லை என்கின்றனர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அரசியல் உடன் பிறப்புகள்.

செந்தில் பாலாஜி அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த பிறகு, செந்தில் பாலாஜி ஜோதிமணி இருவரும் ஒன்றாகவே அரசியல் பிரச்சாரம் கட்சி நிகழ்ச்சிகள் என கலந்து கொண்டனர், அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு செந்தில்பாலாஜி நடத்தும் பல நிகழ்ச்சிகளில் ஜோதிமணிக்கு அழைப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட கூட்டணி கட்சி எம்பி என்ற முறையில் திமுகவினர் ஜோதிமணியை பிரச்சாரத்திற்கு அழைக்கவே இல்லை, அத்துடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செந்தில் பாலாஜி மீதும் மின்வாரியம் மீதும் ஊழல் குற்றசாட்டுகளை வைத்தார், வழக்கமாக செந்தில்பாலாஜி பற்றி. குற்றசாட்டு எழுந்தாலே செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து பதிவிடும் ஜோதிமணி, அண்ணாமலை தெரிவித்த ஊழல் குற்றசாட்டு குறித்து வாய் திறக்கவில்லை.


இதில் இருந்தே அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் ஜோதிமணிக்கு இடையே உண்டான விரிசல் குறித்து அறிந்து கொள்ளலாம், நிலைமை இவ்வாறு இருக்க நண்பர்களாக ஒன்றாக வலம் வந்தவர்கள் இப்போது பிரிய வெளிப்படையாக மோதி கொள்ள என்ன காரணம் என விசாரித்த போது கரூர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் தெரிவித்த கருத்துக்கள் ஆச்சர்யமாக இருந்தது.

செந்தில்பாலாஜி தரப்பை முந்தும் அளவிற்கு கரூர் என்றால் ஜோதிமணிதான் என ஒருகட்டத்தில் பிரச்சாரம் வலுவாக இருந்து இருக்கிறது, இதற்கு செந்தில் பாலாஜி தரப்போ, நாம் இல்லை என்றால் ஜோதிமணி டெபாசிட் கூட வாங்கி இருக்க மாட்டார், இவர் கடந்த காலங்களில் பெற்ற வாக்குகள் என்ன. எத்தனை தேர்தலிகளில் வெற்றி பெற்றார், ஏதோ கூட்டணி அமைந்தது செந்தில் பாலாஜியும் தாராளமாக தேர்தல் செலவுகளை கவனித்து கொண்டார் என பேசியிருக்கிறார்களாம்.

இந்த விவகாரம் ஜோதிமணி காதுகளுக்கு எட்ட, காங்கிரஸ் கட்சி கூட்டணி இல்லை என்றால் நிச்சயம் திமுக வெற்றி பெற்று இருக்காது, கரூரில் சிறுபான்மையினர் வாக்கு காங்கிரஸ் கட்சிக்குத்தான் செல்லும் சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுக தனித்து நின்று இருந்தால் திமுக கரூர் பகுதியில் நிலையான வெற்றியை பெற்று இருக்க முடியாது என அவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

இப்படி மாறி மாறி மோதல் உண்டாக வெளிப்படையாக அமைச்சர் செந்தில்பாலாஜி இனி ஜோதிமணி கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைக்கவேண்டாம் எனவும், அரசு நிகழ்ச்சிகளில் திமுகவே முன்னிலை படுத்த வேண்டும் என வாய்மொழி உத்தரவே போட்டுவிட்டாராம்.

மொத்தத்தில் கரூர் கலெக்டர் மூலம் செந்தில் பாலாஜிக்கு செக் வைக்காதான் உள்ளிருப்பு போராட்டம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் ஜோதிமணி, தற்போதுவரை அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரை பயன்படுத்தாத ஜோதிமணி விரைவில் செந்தில் பாலாஜி பெயரை குறிப்பிட்டு நேரடியாக குற்றசாட்டு வைத்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை என்கின்றன கரூர் அரசியலை கவனித்து வரும் அரசியல் ஆர்வலர்கள்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.