Cinema

அய்யய்யோ.. பிஜேபியை நான் அப்படி சொல்லவில்லை! நெறியாளரை பதறவிட்ட கஸ்தூரி..!

kasthuri
kasthuri

நடிகை கஸ்தூரி ஒரு நேர்காணலில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து கடைசியில் நெறியாளரை  ஒரு கேள்வி கேட்டு பதற வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.


அதில், நீட் தேர்வு கொண்டு வந்தது பாஜக என நெறியாளர் கேட்க... "வரலாறு தெரியவேண்டும் அமைச்சரே".... நீர் கொண்டுவந்தது காங்கிரஸ் என குறிப்பிடுகிறார் கஸ்தூரி. அதற்கு நெறியாளர் காங்கிரஸ் இருக்கும் வரை நீட் வரவில்லை என குறிப்பிட, "காங்கிரஸ் இருக்கும் வரை அல்ல ஜெயலலிதா இருக்கும்வரை நீட் இல்லை" என குறிப்பிடுங்கள் என பதிலடி கொடுத்தார்.

அடுத்ததாக சமூகநீதி பற்றி விவாதம் தொடங்குகிறது. சமூகநீதி பற்றி தெரிவிக்கும்போது அரசாங்க தரப்பிலிருந்து தான் சாதி சான்றிதழ் கேட்கின்றனர். சாதியை வைத்து அரசியல் தான் நடக்கிறதே தவிர சமூகநீதிக்கு அது பயன்படவில்லை. சமூக நீதி என்பது கீழே இருக்குறவங்கள மேலே கொண்டு வருவது .அதை விட்டு விட்டு மேலே இருக்கிறவங்களை கீழே வா என சொல்வது சமூகநீதி கிடையாது. அதற்கு பேரு பச்சை துரோகம். அதை தான் இன்றைய அரசியல் செய்கின்றன. 2000 வருடமாக பின் தங்கி இருக்கிறோம் என எத்தனை வருடம் சொல்லிக்கொண்டே இருக்க முடியும். அதனால்தான் மேலே வரவேண்டும் என அனைவரும் நினைக்கின்றனர் என கஸ்தூரி தெரிவிக்கின்றார்.

அதற்கு மறுப்பு தெரிவிக்கும் நெறியாளர் பள்ளிகளில் குழந்தைகளின் சாதி பதிவு செய்வதற்கு காரணம் அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்க என பொய் மூட்டை கழட்டிவிட, எந்த தனியார் பள்ளியில் ஸ்காலர்ஷிப் கொடுக்குறாங்க என அதிரடி கேள்வி கேட்கிறார் கஸ்தூரி. அதுக்கு இருக்கு.. இருக்கு.. தராங்க என  நெறியாளர் சொல்கிறாரே தவிர, எந்த தனியார் பள்ளி சொல்லுங்கள். என் பிள்ளைகளை அங்கு சேர்த்து விடுகிறேன் என கஸ்தூரி கேட்க, அப்போதும் பள்ளி பெயரை சொல்ல முடியாமல், இருக்கு இருக்கு என  மட்டுமே சொல்லி முடித்துக்கொண்டார் நெறியாளர்.

தொடர்ந்து மாநாடு படம் பற்றி பேசும் போது நடிகர் சிம்பு ஏன் இப்படி பிரச்சனை சந்தித்து வருகிறார் என கேள்வி கேட்க.. இன்றைய சினிமா துறை குறிப்பிட்ட சில பார்ட்டியின் கட்டுப்பாட்டில்  இருக்கின்றது. எல்லாம் பிசினஸ்தான் என தெரிவிக்கிறார். அதற்கு நெறியாளர் குறிப்பிட்ட பார்ட்டி என்றால் யார் என கேட்க... சொல்ல மறுக்கிறார் கஸ்தூரி. அப்படி என்றால் உங்களுக்கு பயமா என நெறியாளர் கேட்க...  ஆமாம் என குறிப்பிட்டு, "ஆமாம் எனக்கு பயம் தான் அனுபவம் இருக்கிறது" என சொல்கிறார்.

உடனே நெறியாளரை பார்த்து பாஜகவை மதவெறி கட்சி என சொல்றீங்களா? என கேள்வி கேட்க நான் அப்படி சொல்லவில்லை. மற்றவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள் என தெரிவிக்கிறார் நெறியாளர். அப்போது கஸ்தூரி,  "ஒரு நெறியாளர் உங்களுக்கு ஒரு லிமிட் இருக்கு.. அது போன்றுதான் ஒரு சினிமாக்காரியாக எனக்கும் ஒரு லிமிட் இருக்கிறது" என புரிய வைக்கிறார். ஆக மொத்தத்தில் கஸ்தூரி வாயிலிருந்து ஏதாவது வருமா என எதிர்பார்த்து மாற்றி மாற்றி கேள்வி கேட்டவரை பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்டு பதற  அளித்துள்ளார் கஸ்தூரி. சமீப காலங்களில் நெறியாளர்கள் கேள்வி கேட்பதை காட்டிலும், guest தங்களுடைய நியாயமான கோரிக்கையை எடுத்து வைப்பதன் மூலம் அவர்களின் வாயை பொத்தி விடுகின்றனர்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.