ஒரு வழியாக தமிழக சட்டசபை பொது தேர்தல் முடிவடைந்த நிலையில், கடந்த தேர்தல் நாட்களில் நடைபெற்ற சம்பவங்கள் சமூகவலைத்தளங்களில் கிண்டலை உண்டாக்கியுள்ளது, இந்த நிலையில் இன்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களிடம் சிக்கிய இருவர் உள்ளனர்.
ஒருவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் செந்தில், கடந்த காலங்களில் தன்னை தமிழ் தேசிய ஆதரவாளராக அடையாளப்படுத்தி கொண்ட செந்தில் ஒரு கட்டத்தில், நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை எதிர்க்க தமிழர் கோஷத்தை முன்னெடுத்தார் தமிழகத்தை தமிழர்கள் ஆள வேண்டும் எனவும் தெரிவித்து பல வீடீயோக்களை உணர்ச்சி பொங்க பேசினார் செந்தில்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக செந்தில் முழுமையான திமுக நபராக மாறியதாக சமூகவலைத்தளங்களில் குற்றசாட்டு எழுப்ப பட்டது, அதனை உறுதி செய்யும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுகவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட அரசியல் கட்சிகளை விமர்சனம் செய்துவந்தார், இந்த சூழலில் திடீர் என திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெரும் என குறியீடு செய்தியை பகிர்ந்தார்.
அவர் அவ்வாறு தெரிவிக்க சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர் #செந்தில்னாசாப்டியானா என கிண்டல் எடுக்க அது ட்ரெண்ட் ஆகியது திமுகவினரடிம் ஓசி சோறு சாப்பிடும் பட்டியலில் நிகழ்ச்சி தொகுப்பாளர் செந்தில் இடம்பெற்றுள்ளதாக கிண்டல் அடிக்க நெட்டிசன்கள் செந்திலை கலாய்த்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க விசிக கட்சியை சேர்ந்த செங்கொடி அந்த கட்சியில் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் புதிய கட்சியை தொடங்கியதாக கூறி நெட்டிசன்கள் அவரையும் கிண்டல் அடித்து வருகின்றனர், இவை தவிர வாக்கு பெட்டி என நினைத்து திமுகவினர் ட்ரில்லிங் மெஷினை கொண்டு சென்றவரை பிடித்து வைத்து இருப்பதாகவும் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.