"ரூல் கர்வ்" நடைமுறை முல்லைப்பெரியாறு அணைக்கு பொருந்தாது - தமிழக விவசாயிகளை ஏமாற்ற திமுக அரசின் திட்டமிட்ட சதி என பாஜக விவசாய அணி மானில தலைவர் GK நாகராஜன் கடும் கண்டனத்தை தமிழக அரசிற்கு தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு .,
"ரூல் கர்வ்" என்பது திடீரென்று திமுக ஆட்சியில் இந்த ஆண்டு நடைமுறைப் படுத்தப்படுகிறது. கேரள அரசோடு சேர்ந்து திமுக அரசு தமிழக விவசாயிகளுக்கு செய்யும் கூட்டுசதி.கேரளாவில் எந்த ஒரு அணைக்கும் "ரூல் கர்வ்"முறை நடைமுறைப்படுத்தப் படவில்லை. 72 டி.எம்.சி(TMC) கொள்ளளவு உள்ள இடுக்கி அணைக்கும் இது நடைமுறைப்படுத்த படவில்லை.
ஆனால் வெறும் 15.5 டி.எம்.சி (TMC) கொள்ளளவு உள்ள முல்லைப்பெரியாறு அணைக்கு மட்டும் "ரூல் கர்வ்" முறை திடீரென புதிதாக புகுத்தி, 139 அடி நீர்மட்டத்திலேயே தண்ணீரை திறந்து விடுவது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல். இதன் மூலம் 3 டி.எம்.சி(TMC) தண்ணீர் இடுக்கி அணைக்கு சென்று மின்சார தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது.ஆனால் "ரூல் கர்வ்" முறை இடுக்கி அணையில் கேரள அரசு நடைமுறைப்படுத்துவதில்லை.
முல்லைப்பெரியாறு அணையின் உண்மையான முழு நீர்மட்ட உயரம்(FRL)152 அடியாகும்.142 அடி என்பது உச்சநீதிமன்றத்தின் தற்காலிக தீர்ப்புதான். கேரளாவின் "ரூல் கர்வ்" முறை முல்லைப்பெரியாறு அணைக்கு பொருந்தாது. திடீரென்று திமுக ஆட்சியில் இந்த ஆண்டில் "ரூல் கர்வ்" முறையை கொண்டுவந்து, தண்ணீரை திறந்துவிடுவது ஏற்றுக்கொள்ள இயலாது.திமுக தனது துணைப்பிரதமர் கனவிற்காக வும்,கேரளாவில் உள்ள தனது தொலைக்காட்சி இணைப்புகளை காப்பாற்றிக் கொள்ளவும் செய்துகொண்ட மறைமுக ஒப்பந்தம்.
"ரூல் கர்வ்" முறை முல்லைப்பெரியாரில் நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதிகளையும், நடிகர்,நடிகைகளின் ஆடம்பர பங்காளக்களையும் வீடுகளை நீரில் மூழ்காமல் பாதுகாக்க உருவாக்கப்பட்ட புதிய திட்டம்.இது தமிழக விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தையும், வாழ்வாதார பாதிப்பையும் ஏற்படுத்தும்.மதுரை மாநகரில் குடிநீர் பஞ்சத்தை உருவாக்கும்.
"ரூல் கர்வ்" முறையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது."ரூல் கர்வ்" முறையை பின்பற்றி தண்ணீரை திறந்துவிடக்கூடாது. நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் "ரூல் கர்வ்" முறையைப் பற்றி சரியான விளக்கத்தை தமிழக விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும் இவ்வாறு GK நாகராஜன் குறிப்பிட்டுள்ளார்
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.