Cinema

சூர்யா பக்கம் நின்ற ஜோதிமணி எங்கே தேடும் கரூர் வாசிகள் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது போராட்டத்தில் இறங்குவாரா?

Jothimani protest
Jothimani protest

நடிகர் சூர்யா பக்கம் நிற்பதாக ஜெய்பீம் விவகாரத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி எங்கே எனவும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க தலைநகர் சென்னையில்  போராட்டத்தில் இறங்குவாரா எனவும் கரூர் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு காலணி பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார். விட்டில் தனியாக இருந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பக்கத்து வீட்டு பாட்டி மாணவி நீண்ட நேரமாக வெளியில் வராததை கண்டு வீட்டினுள் சென்று பார்த்துள்ளார். மாணவி தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இதனை அடுத்து அவர் சிறுமியின் தாயிக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் வந்த பிறகு வெங்கமேடு காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். அங்கு வந்த போலீசார் (Police) உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் (Government Hospital) கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனை.

அப்போது இறப்பதற்கு முன்பு அவர் எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதில்., sexual harresment ஆல இறக்கும் கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும், என்ன யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு, இந்த பூமியில் வாழரத்துக்கு ஆசைப்பட்டேன், ஆனா,  இப்போ பாதியிலேயே போரேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ கிடைச்சா நல்லா இருக்கும்.

பெரியவளாகி நிறைய பேருக்கு உதவி பன்ன ஆசை ஆனா முடியாதில்ல என குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார். இந்த கடிதத்தை ஆதாரமாக கொண்டு வெங்கமேடு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது கரூர் பகுதியிலும் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி தன்னை அரசியல்வாதி என்பதை தாண்டி சமூக செயற்பாட்டாளர் எனவும் குறிப்பிட்டுள்ளார் அந்த வகையில், தொடர்ச்சியாக திமுக ஆட்சியில் மாணவிகள் தொடர் தற்கொலைகளை மமுன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் போராட்டம் என நடத்துவாரா? இல்லை ஒப்பிற்கு ட்விட்டரில் ட்விட்களை பகிர்ந்துவிட்டு வேடிக்கை பார்ப்பாரா?

நடிகர்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை காட்டிலும் சொந்த ஊர் மாணவிக்கு ஆதரவாக களத்தில் இறங்கி அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பாரா ஜோதிமணி என பலரும் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அன்று அதிமுக ஆட்சியில் காந்தி சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்க போகிறார்கள் என்பதற்கே மிக பெரிய போராட்டத்தை நடத்திய ஜோதிமணி தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு நீதி கிடைக்க என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.