24 special

ப்பா என்னது இந்த பொண்ணுக்கு!! ஆபத்தான பகுதியில் அசால்ட்டாக டிரக்கிங் சென்ற பெண்!!

GIRLS TRUCKING
GIRLS TRUCKING

முதலில் ஏதேனும் விடுமுறைகள் கிடைத்தால் கோவில் குளம் என்று சுற்றுலா சென்று மகிழ்வித்து வரும் பழக்கம் இருந்து வந்தது. ஆனால் இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில் சிறிய விடுமுறை கிடைத்தாலும் கூட எங்காவது தூரத்திற்கு சுற்றுலா சென்று வரவேண்டும் என்ற எண்ணம் இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் சிலர் சுற்றுலாவை ஆபத்து நிறைந்த இடங்களில் கழிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். எப்போதும் போல இல்லாமல் மிகவும் ஆபத்தான பகுதிகளுக்கு சென்று ஒரு புதிய அனுபவத்தை பெற வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகின்றனர். முதலில் சிறிய சிறிய ஆபத்துக்கள் உடைய சுற்றுலா இடங்களுக்கு சென்று அதில்  நல்லா அனுபவங்களும், அதற்கு ஏற்றது போல உடல் நிலையையும் மாற்றிக் கொண்டு அதன் பிறகு ஒரு பெரிய சுற்றுலா இடங்களுக்கு ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு செல்கின்றனர்.


இந்த நிலையில் தற்பொழுது பல இளைஞர்களும், பெண்களும் இவ்வாறு ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு சென்று ஜாலியாக ஊர் சுற்றுவது போன்ற வீடியோக்களை அதிகமாக இணையதளங்களின் மூலம் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட இடங்களை பார்க்கும் பொழுது அங்கெல்லாம் செல்லாதவர்கள் இவ்வளவு ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு எப்படி இவர்கள் போனார்கள்?? இதில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டு விட்டால் என்ன செய்வார்கள் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறது!! இத்தகைய ஆபத்து நிறைந்த பகுதிகளில் கூட எந்தவித பயமும் இல்லாமல் மிகவும் துணிச்சலோடு தற்போது உள்ள இளைஞர்கள் சுலபமாக சென்று விட்டு வருகின்றனர். மேலும் முதலில் எல்லாம் திருமணம் ஆன தம்பதிகள் ஊட்டி கொடைக்கானல் மற்றும் காஷ்மீர் போன்ற குளிர்பிரதேசங்களுக்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருவார்கள்.

ஆனால் தற்பொழுது இப்படி புதுமண தம்பதிகள் கூட ட்ரக்கிங் செல்ல வேண்டும், புதிய இடங்களுக்கு சென்று அனுபவங்களை பெற வேண்டும் என்று நினைத்து பல ஆபத்து நிறைந்த இடங்களுக்கும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் தற்பொழுது இளம்பெண் ஒருவர் ஆபத்து நிறைந்த மலை ஒன்றில் சென்று வீடியோவை எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த இடம் மிகவும் பார்ப்பதற்கு ஆபத்து நிறைந்ததாக உள்ளது. அது என்ன இடம்??  மற்றும் அங்கு சுற்றுலா பயணிகள் எப்படி அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்த விரிவான தகவலை காண்போம்!மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்திலுள்ள பிரபால்காட் கோட்டையின் அருகில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் இடம்தான் இந்த கலவந்தின் துர்க்!! இந்த பகுதியானது மிகவும் உயரமாக இருப்பதால் இங்கு ட்ரக்கிங் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளமாக இருந்து வருகின்றனர்.

மேலும் இதில் ட்ரெக்கிங் செல்வது என்பது மிகவும் சவால் நிறைந்த ஒன்றாக இருக்கும் என்றும், சிறிது கவனம் சிதறினால் கூட உயிர் பிழைக்க முடியாது என்றும் இந்த மழையினை பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த மலையை ஏறும் பொழுது பல மலையேறும் வீராங்கனைகளும் கூட இறந்து அதன் பிறகு அவர்களின் சடலமானது மீட்கப்பட்டுள்ளது. எனவே ட்ரக்கிங் செல்ல வருபவர்களுக்கு சரியான பாதுகாப்பு தற்பொழுது வழங்கப்பட்டு வருகிறது என்றாலும் கூட இந்த பகுதி மிகவும் ஆபத்தானதே!!!இந்த நிலையில் தற்பொழுது பெண் ஒருவர் இந்த மலையில் உச்சியில் இருந்து கீழே எந்தவித பயமும் இல்லாமல் மிகவும் அசால்ட்டாக இறங்குவது போன்ற வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த இடத்தை வீடியோவில் பார்ப்பதற்கே மிகவும் பயமாக இருக்கும் பட்சத்தில் அந்தப் பெண் மிகவும் சாதாரணமாக சிரித்துக் கொண்டே இறங்குவது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.