24 special

உலகத்திலேயே முதல் முறையாக ஸ்கிரீனே இல்லாத லேப்டாப்பா!! அறிமுகம் ஆகியுள்ள சூப்பர் டெக்னாலஜி!!

LAPTOP
LAPTOP

இன்றைய உலகத்தில் டெக்னாலஜி என்பது அனைத்து துறைகளிலும் வளர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் முக்கியமாக எலக்ட்ரானிக் பொருள்களின் வளர்ச்சி என்பது தினந்தோறும் அப்டேட் ஆகி கொண்டே வருவது நம்மால் பார்க்க முடிகிறது. இதன் வளர்ச்சி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகவும் இருப்பதால் பலரும் புதிய புதிய மாற்றங்களை ஏற்றுக் கொண்டு அதனை பயன்படுத்தவும் தொடங்கிவிட்டனர். மிகவும் முக்கியமான எலக்ட்ரானிக்கல் பொருட்களில் மொபைல் போன் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் போன்றவை முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இன்றைய நிலைமையில் இவை இல்லாமல் எந்த ஒரு வேலையும் நடக்காது என்று சொல்கின்ற அளவிற்கு இவற்றின் முக்கியத்துவம் பெரும் பங்கு வகித்து வருகிறது.


ஒரு சிறிய கடையில் தொடங்கி பெரிய வியாபாரம் நடக்கும் இடம் மற்றும் அலுவலகம் போன்ற அனைத்து இடங்களிலுமே கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் போன்றவையின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. முதலில் ஒரு ரூம் அளவிற்கு ஒரே ஒரு கம்ப்யூட்டரின் அளவு இருக்கும்.அவ்வளவு பெரிய கம்ப்யூட்டரை அதன் பிறகு அளவினை குறைத்துக் குறைத்து தற்பொழுது ஒரு சிறிய இடத்திற்குள் அடங்கும் அளவிற்கு டெக்னாலஜியை பயன்படுத்தி மாற்றி விட்டனர்.என்னதான் கம்ப்யூட்டர் சிறியதாக ஆக்கப்பட்டாலும் கூட அதனை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அடிக்கடி கொண்டு போக முடியாத காரணத்தினால் சில சிரமங்கள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கம்ப்யூட்டரின் அனைத்து செயல்பாடுகளையும் உள்ளடக்கிய வகையில் லேப்டாப் என்ற ஒன்றினை அறிமுகப்படுத்தினர். இதுவும் கம்ப்யூட்டரில் செய்யப்படும் அனைத்து வகையான வேலைகளையும் செய்யும்.

மேலும் அது மட்டும் இன்றி எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் கையில் தூக்கிக்கொண்டு சென்றுவிடலாம். மேலும் இதனை வைத்து எடுத்து செல்வதற்கு ஒரே  சிறிய பேக் இருந்தாலே போதும் அல்லது கையிலே கூட வைத்துக் கொள்ளலாம் அந்த அளவிற்கு இதனுடைய அளவு சிறியதாக இருக்கும். இவ்வாறு டெக்னாலஜியின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் இன்றைய காலத்தில் மொபைல் போன்களிலேயே எல்லாமே செய்யும் அளவிற்கு பயன்பாட்டுகள் அதிகரிக்கப்பட்டுவிட்டது. இன்று மொபைல் போன்களிலும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு தொடர்ந்து டெக்னாலஜிகளின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் சமயத்தில் தற்பொழுது அனைவரும் வியக்கும் விதமாக மற்றொரு கண்டுபிடிப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக காணலாம்!! 

கம்ப்யூட்டரையே  சிறியதாக்கி லேப்டாப் கண்டுபிடிக்கப்பட்ட காலம் போய் தற்பொழுது லேப்டாப்பையும் தூக்கிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு சூப்பரான டெக்னாலஜி ஒன்று தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சின்ன பேக் ஒன்றிலிருந்து  கீபோர்டு ஒன்றை ஒருவர் எடுக்கிறார். அந்த கீபோர்டுடன் ஒரு கண்ணாடியும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கண்ணாடியை  உன் கண்களில் மாட்டிக்கொண்டவுடன் அது பெரிய அளவில் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் போன்று தெரிகிறது. அந்த கீ போர்டே பயன்படுத்தி நாம் லேப்டாப் பயன்படுத்துவது போலவே நமக்கு தேவையான செயல்களை கண்ணாடியின் மூலம் தெரியும் ஸ்கிரீனில் பார்த்து செய்து விட முடிகிறது. அது மட்டுமல்லாமல் இதில் வீடியோ கால் மூலம் ஏதேனும் மீட்டிங் போன்றவற்றையும் சுலபமாக செய்துவிட முடிகிறது.

மேலும் இதனை பயணம் செய்பவர்களும் ஈசியாக எடுத்துச் செல்லும் வகையில் இருப்பதால் எங்கு எப்போது வேண்டுமானாலும் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. இந்த அளவிற்கு சூப்பரான டெக்னாலஜியை பயன்படுத்தி தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய வகையான தொழில்நுட்பம் பார்க்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த ஸ்கிரீன்லெஸ் லேப்டாப்பை தற்பொழுது அனைவரும் வரவேற்று வருகின்றனர். இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.