Cinema

விஜய்க்கு போட்டியாக முன்னணி நடிகர்..? இது லிஸ்ட்லயே இல்லையே!

Vishal, Vijay
Vishal, Vijay

நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கவுள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கு இந்த நிலையில், தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என பெயரில் கட்சியை தொடங்கியுள்ளதாக கூறினார். இது தமிழகத்தில் உள்ள பல கட்சிகளுக்கு ஆட்டம் காண வைத்தது இதனை தொடர்ந்து திரையுலகில் உள்ள மற்றொரு முன்னணி நடிகர் ஒருவர் கட்சி தொடங்கப்போவதாக கூறப்படுவது  மேலும் பல கட்சிகளுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது.


திரையுலகில் இருந்து என்.டி.ராமாராவ், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்து சாதிக்கவும் செய்தனர். அவர்களை மக்களும் ஏற்று கொண்டனர். தற்போது சினிமாவில் நடிக்க கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறினார். அவரது ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் ரஜினிகாந்த் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் அந்த முடிவை கைவிட்டார். அவரை தொடர்ந்து சினிமாவில் அவருக்கு போட்டியாக இருந்த உலகநாயகன் கமல்ஹாசன் திடீரென்று மக்கள் நீதி மய்யம் என்று கட்சியை தொடங்கி அரசியலிலும் சினிமாவிலும் கவனம் செலுத்தி வந்தார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறாமல் போனாலும் அவருக்கான வாக்குகள் அதிகரித்தது. 

இந்த நிலையில், விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பான பேச்சுக்கள் அவ்வப்போது பேசப்பட்டது, அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த வாரம் விஜய் கட்சியை அறிமுகப்படுத்தினார். மக்களிடம் இருவேறு கருத்துக்கள் வந்தாலும் அவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார். 2026 தேர்தலை நோக்கி தான் தனது பயணம் என தெளிவாக கூறியிருந்தார். மக்களை சந்திக்காமல் இணையத்தில் கட்சி பெயரை அறிமுகப்படுத்தியது விமர்சனமாக பேசப்பட்டது. இதுவரை அறிக்கை மூலம் அரசியலை கூறி வந்த விஜய், நேற்று ரசிகர்களை சந்தித்து செல்பி, வீடியோ ஆகியவை எடுத்து கொண்டார்.

விஜயை போலவே சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் புரட்சி தளபதி விஷால் ஏற்கெனவே அரசியல் பணிகளில் விஷால் ஆர்வம் காட்டி வருகிறார். சென்னை ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது வேட்புமனுவில் தவறு இருப்பதாக கூறி அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்காக அதிகாரிகளிடம் விஷால் கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் தனது ரசிகர் மன்றத்தை விஷால் மக்கள் நல இயக்கம் என பெயர் மாற்றி அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களை நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பூத் கமிட்டியும் அமைத்துள்ளாராம். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

தற்போது சினிமாவில் நடித்து வந்த விஷால் திடீரென்று எதற்காக அரசியலில் இறங்கியுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆரம்பத்தில் இருந்து சினிமாவில் விஜய்க்கு போட்டியாக தனது படத்தை வெளியிட்டு வந்த நடிகர் விஷால் போக்கிரி  மற்றும்  தாமிரபரணி படத்தில் மோதலை ஏற்படுத்தினார். அதன் பிறகு விஜய்யின்  கத்தியும் விஷாலின் பூஜையும் வெளியானது. இது மட்டுமில்லாமல் கடைசியாக பைரவா மற்றும் கத்தி சண்டை படம் வெளியாகி தொடந்து சினிமாவில் மோதலை ஏற்படுத்திய விஷால் தற்போது அரசியலில் குதித்து விஜய்க்கு போட்டியாக இறங்கியுள்ளார் என கோடாபம்பாக்கத்தில் ஒரு பேச்சு எழுந்துள்ளது. விஷால் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார். ஆனால், அந்த தேர்தலும் மக்கள் செலுத்தும் தேர்தலும் வேறு என சமூக தளத்தில் பேசி வருகின்றனர். சட்டசபை தேர்தலில் விஷால் போட்டியிடலாம் என தெரிகிறது.