Tamilnadu

சிக்கிய பாதிரி என்ன செய்ய போகிறார் சட்டம் ஒழுங்கு டிஜிபி

Latest post
Latest post

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த நாள் முதல் முக்கிய பதவிகளான தலைமை செயலாளர், சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குனர் ஆகிய  பொறுப்புகளுக்கு மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற்ற இறையன்பு மற்றும் சைலேந்திர பாபு ஆகியோரை நியமனம் செய்தது ,இந்த சூழலில் டிஜிபி யாக பொறுப்பேற்று கொண்டு சைலேந்திர பாபு ,சமுகவலைத்தளங்கள் மூலம் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சமூக நல்லிணக்கம், அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.


ஆனால் அதற்கு சவால் விடும் வண்ணமும் இந்து மதத்தை வணங்குபவர்களை கொச்சையாக பேசி கடும் கொந்தளிப்பை கன்னியாகுமரி பகுதிகளில் உருவாக்கியுள்ளார் ஒரு பாதிரி.

ஒருமையில் பேசி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் நம்பிக்கையும் சீர்குலைத்து அரசியல் வாதிகளை காட்டிலும் தரம் தாழ்த்தி பேசியுள்ளார் ,  இது குறித்து சர்ச்சை பாதிரி மீது பாஜகவை சேர்ந்த பலரும் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் புகார் அளித்து வருகின்றனர்.

தற்போது சர்ச்சை பாதிரி மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக செய்தி தொடர்பாளர் அஸ்வத்தாமன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார் , அத்துடன் சர்ச்சை பாதிரியார் மீது இந்து முன்னணி கொடுத்த புகாரில் இதற்கு முன்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிஷோர் கே ஸ்வாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்த தமிழக காவல்துறை திட்டமிட்டு இந்து கிறிஸ்தவர்கள் இடையே மோதலை உண்டாக்க நினைக்கும் சர்ச்சை பாதிரியை கைது செய்து அனைத்து மக்களுக்கும் பொதுவான துறையாக தமிழக காவல்துறை செயல்படுகிறது என்பதை டிஜிபி சைலேந்திர பாபு நிரூபிப்பாரா ?என்று பொது மக்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.