Politics

மாநில பெண் அமைச்சர் போன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்து இருந்தால் என்ன "குதி குதித்து" இருப்பார்கள் ?

Nirmala seetharam  nandha kumar and Veena George
Nirmala seetharam nandha kumar and Veena George

கேரளாவில் பெண் அமைச்சர் புகாரில் பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யபட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜை சமூக வலைதளங்களில் அவதூறாக பேசிய குற்றத்திற்காக வார இதழின் ஆசிரியர் கிரைம் நந்தகுமாரை போலீசார் கைது செய்தனர். நந்தகுமாரை எர்ணாகுளம் சைபர் போலீசார் கைது செய்தனர்.  முகநூல், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக அமைச்சரின் தனிச் செயலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.  நந்தகுமார் எர்ணாகுளம் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


நந்தகுமார் மீது ஐடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அவர் சைபர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது யூடியூப் மற்றும் ஃபேஸ்புக்கில்  மாநில காவல்துறை தலைவர் அனில் காந்த் பெற்ற புகார் விசாரணைக்காக திருக்காக்கரா சைபர் ஸ்டேஷனிடம் ஒப்படைக்கப்பட்டது.  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்தனர்.  நந்தகுமாரை போலீசார் எர்ணாகுளம் சிஜேஎம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நந்தகுமார் குறிப்பிட்டதாவது மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில் அமைச்சர் வீணா ஜார்ஜ் அழகு நிலையங்களில் நேரத்தை செலவிட்டு கொண்டு இருக்கிறார் என விமர்சனம் செய்து இருந்தார், இந்த காரணத்திற்காக கம்யூனிஸ்ட் ஆளும் கேரளாவில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அதே நேரத்தில் ஜெய் பீம் படத்தில் கதாநாயகனாக காட்டப்பட்ட முன்னாள் நீதிபதி சந்துரு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்தார் ஊறுகாய் அம்மையார் என குறிப்பிட்டு பதிவிட்டவர் அதன் பிறகு தனது பதிவை நீக்கிவிட்டு முகநூலை லாக் செய்தார். இதில் சந்துரு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில்தான் பலரும் கேரளாவில் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டது போன்று மத்திய அமைச்சரை தரக்குறைவாக விமர்சனம் செய்த முன்னாள் நீதிபதி மீது நடவடிக்கை எடுத்தால் இந்த கம்யூனிஸ்ட்கள் கருத்து சுதந்திரம் என என்ன குதி குதித்து இருப்பார்கள் என்று விமர்சனங்களை பாஜகவினர் எழுப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.