Tamilnadu

நெஞ்சை "உறைய" வைக்கும் தகவல் மோடி எதிப்பாளர்கள் படிக்க வேண்டாம்.. வைரலாகும் பதிவு!

Modi
Modi

இந்திய பிரதமர் மோடி மீது குற்றம் சுமத்தும் எதிர்க்கட்சிகள் அவர்களின் குற்றச்சாட்டிற்கு இதுவரை ஆதாரம் கொடுத்தது இல்லை, பணமதிப்பிழக்க நடவடிக்கை குறித்து தற்போதுவரை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் சூழலில் இணையத்தில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது அவை பின்வருமாறு :- நம் அண்டை நாடான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் தங்களின் மூன்று மாத சம்பள பாக்கியை டுவிட்டரின் மூலம் பாகிஸ்தான் பிரதமரிடம் கேட்டுள்ளனர்.


பாகிஸ்தான் அதிகாரிகள் கேட்டால் நமக்கு என்ன?  என்று நீங்கள் நினைக்கலாம்.  நாம் இதில் உள்ள உண்மையை உணர வேண்டும்.  ஆம்!.  2014க்கு முன் அதாவது மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என இவைகள் அனைத்தும் கிட்டத்தட்ட இந்தியாவின் சரிக்கு சமமான பொருளாதார நிலையில் இருந்தது...   தற்போது வெறும் 8 முதல் 20கோடி மக்கள் தொகை கொண்ட நம் அண்டை நாடுகள் அனைத்தும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியில் உள்ளது.  

அதில் பாகிஸ்தான் தன் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட முடியவில்லை.  இலங்கை தன் நாட்டு மக்களுக்கு அத்தியவாசிய பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய முடியவில்லை.  மோடி அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை அண்டை நாடுகளின் தற்போதைய ஏழ்மைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது!காரணம் இந்திய கள்ள நோட்டுகள் சாதாரணமாக அந்த நாடுகளில் அச்சிடப்பட்டு வந்தது, இப்படி நம் அண்டை நாடுகள் தத்தளிக்கும் போது 130கோடி மக்கள் தொகை கொண்ட நம் பாரத தேசம் 100கோடி மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியது மட்டும் இல்லை.

இந்த கொரோனா காலத்தில் ஏழைகளுக்கு இலவச உணவு தானியம்! 5கோடி ஏழைகளுக்கு இலவச வீடு, 2கோடி ஏழை இல்லத்தரசிகளுக்கு இலவச சிலிண்டர் இணைப்பு கொடுத்து, 40கோடி வீடுகளுக்கு இலவச கழிப்பறை கட்டிக்கொடுத்தும், 7கோடி விவசாயிகளுக்கு வருடம் 6000ரூபாய் பயிரிட ஊக்கத்தொகை வழங்கியும் வருகிறது.

8000கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளை நான்குவழிச் சாலைகளாக அமைத்து, பாதுகாபற்று இருந்த நம் இந்திய ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு கவசம் வழங்கி, நம் நாட்டை வான்வழி மூலம் காக்க பிரான்ஸிடம் ரபேல் விமானம், ரஷ்யாவிடம் S400தடுப்பு ஏவுகணை கொள்முதல் செய்தும் வரலாற்றில் இல்லாத அளவிற்கு நம் பாரதத்திடம் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்ந்து உள்ளது.  தற்போது ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து உபி யில் A K 157 துப்பாக்கி தொழிற்சாலை.

இவை எல்லாம் மோடி எனும் சிறந்த தலைமை இருந்ததால் மட்டுமே இது சாத்தியப்பட்டது எனவும் அந்த வைரலாகும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் பிரதமர் மோடியின் ஆளுமையின் கீழ் இந்தியா வளர்ச்சி பாதையில் செல்வதாகவும் எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றசாட்டுகள் அனைத்தும் நீர்த்துப்போக செய்யும் அளவிற்கு பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுவதாக அவரது ஆதரவாளர்கள் ஆணி தரமாக நம்புகின்றனர். இதுவே வருகின்ற 2024 நாடாளுமன்ற பொது தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால் பாஜகவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் என்ன செய்வது என அறியாமல் உறைந்துப்போய் இருக்கின்றன.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.