பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான H.ராஜா இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியவர் யார் திராவிடர் என்பதை தெளிவு படுத்த வேண்டும், நானும் திராவிடர் தான் தமிழ் தெலுங்கு மலையாளம், துளு (குஜராத்தி) மொழி பேசியவர்களை திராவிடர்கள் என்று கூறுகிறீர்கள் அப்படி என்றால் பிரதமரும் திராவிடர் தான் என அதிரடியாக தெரிவித்தார்.
இது குறித்து கார்ட்டூனிஸ்ட் பாலா தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அது பின்வருமாறு :- தமிழர்கள் னு சொன்னா பார்ப்பான் உள்ளே வந்துருவான், அதை தடுக்கதான் திராவிடர்கள்னு சொல்றோம்னு திராவிடர்கள் டிசைன் டிசைனாக தெரிவித்தார்கள்.
ஆனா ராஜா சர்மாஜி திராவிட கம்பெனி சீக்ரெட்டை போட்டு உடைச்சதுமில்லாமல் திராவிட அடையாளமே எங்களுடையதுதான், நாங்கதான் ஒரிஜினல் திராவிடர்கள்னு பிட்டு பிட்டு வச்சுட்டாப்ள, அட திராவிட கருவாட்டு சாம்பார்களா ஒரிஜினல் திராவிடர்களான ஆரியர்களே பங்குக்கு வந்துட்டாய்ங்க.
இனி எதை வச்சு உருட்டி தமிழன் தலையில் மிளகாய் அரைப்பீங்க என கேள்வி கேட்டுள்ளார் ஏற்கனவே சுபவீ கருவாட்டு சாம்பார் என்ற விமர்சனத்தை எதிர்கொண்டவர் என்பதால் இதற்கு சுபவீ என்ன பதில் சொல்ல போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாக யார் திராவிடர் என்ற விவாதம் அதிகரித்து வரும் சூழலில் தற்போது அதற்கான கருத்துக்கள் பல தரப்பிலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.