மத்திய அரசின் பாடத்திட்டமான CBSE பாடத்திட்டத்திற்கு அரசு பள்ளி மாணவர்களின் பாடத்தை மாற்றி அமைக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது, நீட் தேர்வு உள்ளிட்ட பல மத்தியஅரசு தேர்வுகளுக்கு மாநில அரசின் பாடத்திட்டம் போதிய திருப்தியை அளிக்கவில்லை என்ற காரணத்தால் தரம் உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து கல்வியாளர் ஒருவர் பகிர்ந்த தகவல் பின்வருமாறு :- ஆந்திராவில் இப்பொழுது ஆட்சி செய்து வரும் ஜெகன் மோகன் ரெட்டி அரசானது மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் புது கல்விக் கொள்கையில் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க சிபிஎஸ்இ பாடத் திட்டத்திற்கு அதாவது மத்திய அரசு பாடத் திட்டத்திற்கு மாற்றுகிறார்கள்.
2024 ஆம் ஆண்டிற்குள் அனைத்து அரசு பள்ளிகளும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்திற்கு மாற்றப்படும்.ஆந்திரா அரசானது தமிழ்நாட்டை விட மிகச்சிறந்த மாநில பாடத்திட்டம் வைத்திருந்தாலும் தரமான கல்வி என்ற இலக்கையும் புது கல்விக்கொள்கையில் மாணவர்களுக்கு மிகச் சிறந்த கல்வி கொடுப்பதற்காகவும் மத்திய அரசுடன் இணைந்து ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வருவதற்கான முனைப்பில் இறங்கியுள்ளது பாராட்டத்தக்கதாகும்.
ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே பாடத்திட்டம் என்று வரும்பொழுது அனைத்து மாணவர்களுக்கும் சமமான தளத்தில் போட்டி போடுவதற்கு மிகச் சிறந்த வாய்ப்பு கிடைக்கும். நம் தமிழ்நாட்டிலும் இது நடக்குமா பொருத்திருந்து பார்க்கலாம்.மத்திய அரசுடன் இணைந்து அனைத்து மாநில அரசுகளும் ஒரே பாடத் திட்டத்தை கொண்டு வரும்பொழுது ஒரு மிகச்சிறந்த பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு கொடுக்கலாம்.
மாணவர்களின் தரம் உயர்ந்து இந்தியக் கல்வி மேம்பட்டு உலக அளவில் பரிமளிக்கும்என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் தொடர்ச்சியாக நீட் தேர்வு உள்ளிட்ட பொது தேர்வை ரத்து செய்வோம் என வீணாக பேசிக்கொண்டு இருக்காமல், ஆந்திர அரசு போன்று மத்திய அரசின் பாடத்திட்டத்திற்கு மாறினால் அரசு பள்ளி மாணவர்களும் முழுமையான அளவில் இன்னும் சிறப்பாக போட்டி போட்டு வெற்றி பெறுவார்கள் என்று பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
More watch videos