Tamilnadu

ஒரு பாதிரியார் செய்யக்கூடிய செயலா இது? விஜயகாந்த் பட பாணியில் பொறிவைத்து பிடித்த சி.பி.சி.ஐ.டி !

CBCID
CBCID

திரைப்படத்தில் கள்ள தொழில் செய்யும் ரவுடிகள் அரசு அதிகாரிகளை மிரட்டி தங்களது தொழிலுக்கு பணிய வைப்பது அல்லது லஞ்சமாக கொடுத்து பணிய வைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கும் இறுதியில் நேர்மையான கதா நாயகன் களத்தில் இறங்கி திருடர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவார், இது போன்ற காட்சிகள் விஜயகாந்த் திரைப்படத்தில் அதிகம் இடம் பெற்று இருக்கும்.


அதே போன்று நிஜ வாழ்க்கையிலும் அரங்கேறி இருக்கிறது, இதை செய்தது ஓரு பாதிரியார் கூட்டம் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் அதுதான் உண்மை?  திரைப்படத்தை மிஞ்சும் வகையில் அரங்கேறியுள்ளது நிஜ சம்பவம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் கிராமத்தில், கேரள மாநிலம் பத்தனம்திட்டா கத்தோலிக்க சபைக்கு சொந்தமான நிலம் உள்ளது.

அதில், 2019 நவம்பர் முதல், கேரள மாநில பாதிரியார் மனுவேல் ஜார்ஜ், எம்.சாண்ட் தயாரிக்கும் ஆலை நடத்தி வந்தார். எம் சாண்ட் செயற்கை மணல் தயாரிப்பதாக கூறி, அங்கிருந்து 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆற்று மணல் கடத்தப்பட்டது.

இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் முதற்கட்டமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இதையடுத்து நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் வழக்கு தொடரப்பட்டது, இது குறித்து ஐகோர்ட் உத்தரவின் படி, போலீசார், பாதிரியார் மனுவேல் ஜார்ஜ் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் ஆய்வு செய்ததில் பாதிரியார்கள் நடத்திய எம்.சாண்ட் நிறுவனத்திற்கு, சேரன்மகாதேவி சப் - கலெக்டர் பிரதீக் தயாள் 9.50 கோடி ரூபாய் அபராதம் விதித்தார்.கடத்தலில் ஈடுபட்ட சமீர் கைது செய்யப்பட்டார். அப்போதைய கனிமவளத்துறை உதவி இயக்குனரும், சமீருக்கு உறவினருமான சபீதா துாத்துக்குடிக்கு பணி மாற்றப்பட்டார்.

மணல் கடத்தலில் ஈடுபட்ட உள்ளூர் நபர்கள் எட்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.இதனிடையே வழக்கில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வந்ததால் கடந்த 2021ம் ஆண்டு ஜூலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் அதிர்ந்து போய் விட்டனர் ஒரு நகரத்திற்கு தேவையான மணல்கள் எப்படி கடத்தப்பட்டது என அதிர்ந்து விட்டனர், இதையடுத்து முழுமையான ஆதாரங்களின் அடிப்படையில் நேற்று முன்தினம் மணல் கடத்தலில் தொடர்புடைய கேரள மாநிலம், பத்தனம்திட்டாவை சேர்ந்த பிஷப் சாமுவேல் மார் இரோனஸ், 69, மற்றும் அவரது கூட்டாளிகள் ஐந்து பாதிரியார்களை கைது செய்தனர்.

அவர்களை திருநெல்வேலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நாங்குநேரி சிறையில் அடைத்தனர். இதில் விசாரணைக்கு பல்வேறு இடையூறுகள் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மூலம் வந்த சூழலிலும் நேர்மையான அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டதால் எந்த வித சமரசதிற்கும் உள்ளாகாமல் பாதிரியார்களை கைது செய்து இருக்கிறார்கள்.

இதில் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன எம். சாண்ட் நிறுவனம் மூலம் மணலை பெற்று புதிதாக வீடு கட்டும் முனைப்பில் இருக்கும் நடுத்தர மக்களை குறிவைத்து கடனாக மணலை கொடுக்கின்றனர், பிறகு அவர்களை கால போக்கில் சர்ச்சிற்கு வர வைத்து மத ரீதியிலான கருத்துக்களை விதைக்கின்றனர். சொந்த வீடு என்பது பலரது கனவு அத்துடன் பாதிரியார்கள் சிலர் கொடுக்கும் மத போதனைகளில் ஒரு குடும்பமே மதம் மாறிய சம்பவங்களும் அரங்கேறுகின்றன என பிடிபட்ட பாதிரியார்கள் மீது கடும் குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.

பாதிரியார்கள் மணல் கடத்திய வழக்கை சிபிஐ விசாரணை செய்தால் தமிழகம் கேரளா ஆகிய இருமாநிலங்களிலும் பல்வேறு உண்மைகள், மதமாற்றங்கள் பண பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

More watch videos