பாஜக தலைவர்கள் குறித்து தொடர்ச்சியாக போலி செய்தியை பரப்பி வந்த சின்னத்திரை நடிகை ஷர்மிளா மீது பல்வேறு புகார்கள் குவிந்து வருகின்றன, இந்த சூழலில் மீண்டும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக போலி செய்தியை பகிர்ந்து சிக்கலில் சிக்கியுள்ளார் சீரியல் நடிகை.
விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ஷர்மிளா தொடர்ச்சியாக இரண்டாம் தரமாக பல்வேறு கருத்துக்களை பொது வெளியில் சமூகவலைத்தளம் மூலம் பகிர்ந்து வருபவர், இவர் கடந்த முறை பிரதமர் மோடி குறித்து இணைய ஊடகத்தில் வெளிவந்ததாக போலியான செய்திகளை பகிர்ந்தார் அப்போது பலரும் அவருக்கு உண்மை என்ன என்பதை எடுத்து கூறியும் அவர் பகிர்ந்த போலி செய்தியை நீக்கவில்லை.
இந்த சூழலில் தற்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வீடுகளுக்கு GST வரி விதித்து இருப்பதாக போலி செய்தியை பகிர்ந்து இருந்தார், தொடர்ச்சியாக திட்டமிட்டு போலி செய்தியை பகிர்ந்து வரும் சின்னத்திரை நடிகை மீது பாஜக தேனி மாவட்ட சமூகவலைத்தள பிரிவு சார்பில் காவல்துறை ஆணையரிடத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக மநில ஐ.டி விங் செயலாளர் வசந்த் பாலாஜி வசந்த் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரில் அளித்த புகாரில் :, பாக்டர் சர்மிளா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடு & கடைகளுக்கு GSTவரி 12% விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியதாக பொய் செய்தியை கூறிவருகிறார் அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக போலி செய்திகளை பகிர்ந்து வரும் நடிகையை இதுவரை ஆளும் கட்சி ஆதரவாளர் என்ற முறையில் கைது செய்யாமல் இருந்ததாகவும் தற்போது தொடர்ச்சியாக போலி செய்தியை பகிர்ந்து வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க படலாம் என்று கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக பாஜகவினரை சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாக கைது செய்யும் தமிழக காவல்துறை, புகார் கொடுத்தும் சின்னத்திரை நடிகையை கைது செய்யாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.