Tamilnadu

யார் செய்தது சும்மா கதை விடாதீங்க திமுகவினரை கதறவிட்ட மாரிதாஸ்

Maridhas
Maridhas

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு இன்று திமுக சார்பில் பல்வேறு இடங்களில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது, அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் ஊழள்களின் தந்தை கருணாநிதி என எதிர் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் கருணாநிதி பல்வேறு முன்னோடி திட்டங்களை தமிழகத்திற்கு பெற்று தந்தார் என திமுகவினர் குறிப்பிட அதில் பாதி தவறு என ஆதாரத்துடன் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் மாரிதாஸ் திமுகவினர் முன்வைக்கும் பள்ளிகள் குறித்த கருத்து தவறு என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் குறிப்பிட்ட கருத்து பின்வருமாறு :  தமிழகத்தில் ஊராட்சி ஒன்றிய அளவில் பள்ளிக்கூடங்கள் வருவதற்கு வழிவகை செய்தவர் அதன் வழி அனைவருக்கும் கல்வி சென்று சேர முக்கிய காரணம் திருப்பூர் T.S.அவிநாசிலிங்கம் அவர்கள். பின் அதை விரிவுபடுத்தியவர் காமராஜர்.

சும்மா கருணாநிதி படிக்க வைத்தார் என லேபிள் ஒட்டுவது கேவலம். இவனுக விதவைகள் மறுமணம் ஆரம்பித்து வைக்கம் போராட்டம் தொட்டு தமிழகம் மாநிலமாகப் பிரித்தது வரை அடுத்தவர்கள் செய்த சாதனைகள் அனைத்திற்கும் தாங்கள் செய்ததாக லேபிள் ஒட்டுவது தான் திமுக காலம் காலமாகச் செய்யும் கீழ்த்தரமான அருவருப்பான அரசியல். 

அதில் புதியது கருணாநிதி இல்லை என்றால் நீங்கள் படித்திருக்க முடியாது என்று லேபிள் ஒட்டுவது. கருணாநிதி திமுக கட்சிக் காரர்கள் மூலம் அதிகம் சாராய ஆலைகளைத் தொடங்கி மக்களைக் குடிக்க வைத்தார் என்று சொன்னால் அது ஏற்கக் கூடிய சாதனை.என்று குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதி செய்த ஒரே சாதனை தமிழர்களை குடிக்க வைத்ததுதான் என மாரிதாஸ் குறிப்பிட்ட நிலையில் எங்கள் தலைவர் தமிழர்களை வாழ்வைத்தவர் குடிக்க வைத்தவர் இல்லை என திமுகவினர் கமெண்ட் செக்ஸனில் கதறி வருகின்றனர், மொத்தத்தில் கருணாநிதி பிறந்தநாள் அல்லது நினைவு நாள் வந்தால் நெட்டிசன்கள் திமுகவினரை கதறவிடுவது தொடர்கதையாக மாறிவருகிறது.

இதற்கு முன்னர் முதல்வர் ஸ்டாலின் கோவை சென்றபோது ஸ்டாலினை திரும்பி போ என உலக அளவில் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.