சென்னையில் துப்பாக்கிச்சூடு...!!சப்இன்ஸ்பெக்டர் காயம்..!!பாலத்தில் சம்மர்சால்ட்...!!
நாளடைவில் பணத்தாசை மூளையை மழுங்க வைக்க, செயின் பறிப்பு, வழிப்பறி கொலை என சென்னையில் முக்கியமான ரவுடியாக மாறினான்.இந்நிலையில் திண்டுக்கல் தாதா பாண்டியனின் நட்பு கிடைக்க சிடி மணியின் ரவுடிசம் எல்லைமீறிச் சென்றது.
கடந்த 2009 ல் பாண்டியன் காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.பலத்த போட்டி எதிர்ப்புகளுக்கு (?) மத்தியில் பாண்டியனின் இடத்தை பிடித்தான்.இதற்கிடையில் சிடிமணி மீது பல வழக்குகள் பாய்ந்தன. இவன்மீது எட்டு கொலை வழக்குகள் உட்பட 30 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
சைதாப்பேட்டையை
சேர்ந்த ஒரு ரவுடியும் வேளச்சேரி
ரவுடி கும்பலும் சிடி மணியை கொல்ல
பலநாள் முயற்சி செய்து வந்தனர். அதில் உஷாரான சிடி மணி தனது
பாதுகாப்புக்கு ஒரு துப்பாக்கியை எப்போதும்
வைத்திருப்பான்.
2007 தேனாம்பேட்டை
வெங்கடா கொலை கோயம்பேடு வாழைத்தோப்பு
சதீஷ் கொலை,மற்றும் கேகே
நகர் சங்கர் திவாகரன் இரட்டை கொலை வழக்கு மிகவும்
முக்கியமானவை.
நடு மண்டையில் வெட்டி கொல்வதே இவன் பாணி.இவன் ஸ்கெட்ச் போட்டு கொல்வதில் கில்லாடி.ரவுடி பினு என்கவுண்டருக்கு பிறகு தலைமறைவான சிடி மணி போரூர் அருகே பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்றனர்.போலிசார் வருவதை கண்ட சிடி மணி,தன்னிடமிருந்த துப்பாக்கியால் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனனை நோக்கி சுட்டான். இதில் சப்_இன்ஸ்பெக்டருக்கு தோளில் காயம் ஏற்பட்டது.தப்பித்த சிடி மணி போரூர் மேம்பாலத்திலிருந்து கீழே குதித்தான்.
அப்போது அவனுக்கு கைமற்றும் கால்களில் பலத்த அடிபட்டது.அவனை போலிசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.சிடி மணியிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது..
....உங்கள்
பீமா