கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உத்திர பிரதேசத்தில் அடுத்து அமைய போவது யாருடைய ஆட்சி என்ற தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை பிரபல நிறுவனம் வெளியிட்டுள்ளது, பாஜக ஆட்சியில் உள்ள உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பா.ஜ.க 312 இடங்களை கைப்பற்றி அபார வெற்றியை பதிவு செய்தது. தற்போது 2022-ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கட்சிகள் பெறப்போகும் இடங்கள் குறித்து டைம்ஸ் நவ் மற்றும் போல்ஸ்ட்ரட் ஆகிய பிரபல நிறுவனங்கள் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளன.
உத்திர பிரதேசத்தில் மொத்தம் இருக்கும் 403 தொகுதிகளில் பா.ஜ.க 239 முதல் 245 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் குறிப்பிட பட்டுள்ளது, இது கடந்த 2017 -ல் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் பா.ஜ.க 312 இடங்களில் வென்ற நிலையில் அதைவிட குறைவான எண்ணிக்கையே கிடைக்கும் என கூறப்படுகிறது, அதேநேரத்தில் கடந்தமுறை 47 இடங்களில் வென்றிருந்த சமாஜ்வாதி கட்சி இந்த முறை 119 முதல் 125 இடங்களை கைப்பற்றும் என தேர்தலுக்கு முந்தைய கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி 28 முதல் 32 இடங்களும், காங்கிரஸ் கட்சி 5 முதல் 8 இடங்களிலும் வெற்றிப்பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது, பாஜக மீண்டும் உத்திர பிரதேசத்தில் ஆட்சிக்கு வரும் என்ற கருத்து கணிப்பு பாஜக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கும் இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது.
கூட்டணி இல்லாமல் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி உத்திர பிரதேசத்தில் ஒரு இடம் கூட வெற்றி பெறாது என கூறப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 5 முதல் 8 இடங்கள் கிடைக்கும் என்ற செய்தி உத்திர பிரதேசத்தில் உள்ள அக்கட்சியினருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.