Tamilnadu

பிரதமரின் தமிழக வருகையின் போது பாஜகவில் இணையும் மதுரை பிரபலம் மற்றும் திமுகவினர் யார் யார்?

Pm modi tamilnadu visit
Pm modi tamilnadu visit

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளை திறந்துவைக்க பிரதமர் மோடி வருகின்ற ஜனவரி 12 அன்று ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார், மதுரை வரும் அவருக்கு ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். 


இந்த சூழலில் தமிழக பாஜக சார்பில் மதுரையில் ஜனவரி 12 ஆம் தேதி நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார் மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில் பாஜக சார்பில்  ஜனவரி 12  அன்று மோடி பொங்கல் என்ற தலைப்பில் விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.1,000 பொங்கல் பானைகள் வைத்து பொங்கல் விழா நடைபெறுகிறது. 100 நாதஸ்வர கலைஞர்கள், 50 ஜல்லிகட்டு காளைகளை கொண்டு பிரதமருக்கு வரவேற்பு அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமரின் தமிழக வருகையின் போது திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த பலர் பொங்கல் நிகழ்ச்சியின் போது பாஜகவில் தங்களை முறைப்படி இணைத்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது, இது தவிர்த்து மதுரையை சேர்ந்த மாரிதாஸ் பாஜகவில் இணைய இருப்பதாகவும் அவருக்கு மாநில அளவில் பொறுப்புகள் வழங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

பிரதமரின் தமிழக வருகையை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வகையில் மாற்றவும் குறிப்பாக எதிர் வரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வகையில் வெற்றி வாய்ப்பினை பெற பாஜக தலைமை பிரதமரின் தமிழக வருகையை மாற்றி கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.