Hello FM என்ற வானொலி கிரீடம் விருது என்ற பெயரில் விருதுகளை வழங்கி வருகிறது இதில் 2021ம் ஆண்டுக்கான சிறந்த அரசியல்வாதி விருதிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர்.எடப்பாடி கே.பழனிசாமி,பாஜக தமிழக தலைவர். அண்ணாமலை,விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றனர்.
இந்த சூழலில் ஹலோ எப்எம் குழு தனது அதிகார பூர்வ முகநூல் பக்கத்தில் உங்கள் தேர்வை பதிவு செய்யுங்கள் என குறிப்பிட்டு இருந்தது அவ்வளவுதான் பாக்கி மொத்தம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர், இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கிடைத்தது.
ஆனால் விருது வழங்கும் குழு சிறந்த அரசியல் ஆளுமையாக தமிழக முதல்வர் ஸ்டாலினை தேர்வு செய்து அறிவிப்பு வெளியிட்டது பலரையும் அதிர்ச்சியில் "ஆழ்த்தியது " இந்த சூழலில் வாட்சாப் மூலம் பெற்ற வாக்குகள் அடிப்படையில் குழு விருதை அறிவித்ததாக கூறப்படும் நிலையில் வாட்ஸாப் பிசினஸ் ஆப் மூலம் எத்தனை வாக்குகள் பதிவானது என்று ஹலோ எப்எம் குழு இது வரை தெரிவிக்கவில்லை.
இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு சிறந்த அரசியல் ஆளுமையாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்து அறிவித்த ஹலோ எப்எம் குழு இந்த முறை ஸ்டாலினை அறிவிக்க முன்பே முடிவு எடுத்து செயற்கையாக ஒரு வாக்கு எடுப்பை நடத்தியதாக கூறப்படுகிறது. தற்போது ஹலோ எப்எம் செயல்பாட்டை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இது ஒரு புறம் என்றால் ஹலோ எப்எம் குழுவின் வெளிப்படையற்ற ஒற்றை ஆதரவு செயல்பாட்டை பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர் இதன் மூலம் நம்பிக்கை தன்மையை குறிப்பிட்ட தனியார் வானொலி நிறுவனம் இழந்து இருப்பதாகவும் குற்றசாட்டு எழுந்த நிலையில் அந்த நிறுவனத்தில் விளம்பரம் செய்யும் நிறுவனங்களின் பட்டியலை சேகரித்து விளம்பரம் செய்யும் தொழிலதிபர்களிடம் நடந்த விவரத்தை எடுத்து கூறி விளம்பரத்தை நிறுத்த ஒரு குழு களம் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் வெளிப்படை தன்மையற்று செயல்பட்ட வானொலி நிறுவனத்திற்கு பதிலடி கொடுக்க அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளதாம் அந்த குழு!.