Tamilnadu

தமிழகத்தை சேர்ந்தவர் நாட்டின் அடுத்த குடியரசு தலைவர் யார் அவர்?

Modi
Modi

குடியரசு தலைவர் "ராம் நாத் கோவிந்த்" பதவி காலம் இந்த ஆண்டுடன் முடிவடையுள்ள சூழலில் ஜூலை மாதம் அடுத்த குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது இதில் இந்த முறை பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்க பிரதமர் முடிவு எடுத்து இருப்பதாகவும் அதற்கு தகுதியான ஒருவரை தேர்வு செய்யும் பணியில் பிரதமர் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., நிறுத்திய ராம்நாத் கோவிந்துக்கு 65 சதவீத வாக்குகள் கிடைத்தன. ஆனால் தற்போது 50% வாக்குகள் மட்டுமே கிடைக்கக் கூடிய சூழல் உள்ளது . பா.ஜ.க கூட்டணியில் இருந்து சிவசேனா, அக்காலித்தளம் உள்ளிட்டவை வெளியேறிவிட்டன . ஜம்மு - காஷ்மீரிலும் சட்டசபை முடக்கபட்டுள்ளது.

மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் சேர்த்து வாக்களிக்க தகுதியானவர்கள் 776 எம். பி கள் உள்ளனர், நாடு முழுதும் 31 சட்டசபைகளில்(மாநிலங்கள் )4,126 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப, எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகளுக்கான மதிப்பு மாறுபடும்.

அதன்படி பார்த்தால் உத்தர பிரதேசத்தில் எம்பி மற்றும் எம்எல் ஏ மதிப்பு அதிகமாக இருக்கும். அதனால் த உத்தர பிரதேசத்தில் குறைந்தபட்சம், 250 தொகுதிகளில் வெற்றி பெற, பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். அதுபோல் மற்ற தேர்தல் நடைபெறவுள்ள பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்ரகாண்ட் ஆகிய நான்கு மாநிலங்களிலும் அதிக எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்தால், ஜனாதிபதி தேர்தலில் பாஜகவிற்கு பெரும் உதவியாக இருக்கும்.

இந்த சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் புதிய யுத்தியை கடைப்பிடிக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில குறிப்பிட்ட எதிர்க்கட்சிகளும் ஏற்கும் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த காலத்தில் அப்துல் கலாம் நிறுத்தப்பட்டதுபோல எதிர்க்கட்சிகளாலும் ஏற்கக் கூடிய ஒருவரை நிறுத்த திட்டமிட்டுள்ளார்.இது தொடர்பாக ஆலோசனை வழங்கும்படி, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியிடம், பிரதமருக்கு மிகவும் நெருக்கமான மத்திய அமைச்சர் ஒருவர் பேசியுள்ளார்.

அதுபோலவே ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக்கிடமும் பேசப்பட்டுள்ளது.இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தவும் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதன்படி தெலுங்கானா கவர்னராக உள்ள தமிழிசை சவுந்திரராஜன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரது பெயர்கள் முன்னிலையில் உள்ளன.இவர்கள் தவிர, 'இன்போசிஸ்' நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி ஆகியோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன

ஒரு வேலை ஆண் ஒருவரை குடியரசு தலைவராக நிறுத்த தீர்மானித்தால் 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் சிவம் தற்போதைய துணை குடியரசு தலைவர் வெங்கயா நாயுடு, பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் ஆகியோர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.

இந்தாண்டு இறுதியில் குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. மேலும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு தற்போதே தயாராக வேண்டிய நிலையில், பா.ஜக ., உள்ளது. அதற்கு இந்த மூன்று பிரச்னைகளையும் பா.ஜ., தலைமையும், பிரதமரும் எப்படி சமாளிக்கப் போகின்றனர் என்பதில் இருந்து விடை கிடைத்துவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் நாட்டின் அடுத்த குடியரசு தலைவராக தேர்வாக கூடிய பட்டியலில் இருப்பவர்கள் நிச்சயம் இந்தி மொழி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று என்றும் கூறப்படுகிறது.