Politics

கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வெளியானது !! அதிரடி சர்வே முடிவு!!

கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வெளியானது !! அதிரடி சர்வே முடிவு!!
கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வெளியானது !! அதிரடி சர்வே முடிவு!!

வருகின்ற வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலோடு, காலியாக இருக்கின்ற கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தொகுதியை பொறுத்தவரை கடந்த 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் 


பாஜக சார்பில் மூன்று முறையும் பொன்.ராதாகிருஷ்ணனே வேட்பாளராக களமிறக்கப்பட்டார். இதில் ஒரு முறை அவர் பெற்றார். 2009 ஆம் ஆண்டு முதல்முறையாக கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின், ஹெலன் டேவிட்சன், பாரதிய ஜனதா கட்சியின் பொன். இராதாகிருஷ்ணனை, 65,687 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் போட்டியிட்டார். ஆனால் அதில், 1,28,662 வாக்குகள் வித்தியாசத்தில் வசந்தகுமாரை, பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் தோற்கடித்தார்.கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதியை பொருத்தவரை கன்னியாக்குமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இதில் கன்னியாக்குமரியிலும் நாகர்கோவிலிலும், பத்மநாபபுரத்திலும் திமுக சிட்டிங் எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளது. மற்ற குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சி சிட்டிங் எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசத்திற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி.

பாஜக சார்பில் போட்டியிடும் பொன் ராதாகிருஷ்ணன் தான் கடந்தமுறை பாராளுமன்ற உறுப்பினராகவும் மத்திய இணை அமைச்சராகவும் இருந்த போது செய்த நலத்திட்ட உதவிகளை சுட்டிக்காட்டி வாக்கு சேகரித்து வருகிறார், விஜய் வசந்தை பொறுத்தவரை அப்பா வாக்குறுதி அளித்த திட்டங்களை நிறைவேற்ற எனக்கு வாய்ப்பு அளிக்குமாறு பிரச்சாரம் செய்து வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க தொகுதியில் வழக்கம் போல் கிறிஸ்தவ வாக்குகள் காங்கிரஸ் கூட்டணிக்கு தான் வாக்கு அளிக்க வேண்டும் என சர்ச்களில் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள், மறுபுறம் இந்து அமைப்புகள் பாஜக பக்கம் நிற்கிறார்கள் இவை தவிர்த்து பொதுவான வாக்குகளாக பார்க்கப்படும் வாக்குகள் மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது, பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் அமைச்சராக வரவும் மீண்டும் பழைய திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றவும் வாய்ப்பு இருக்கிறது என வெளிப்படையாக கூறுகிறார்கள்.

இன்னும் சிலரோ காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சி மாறாப்போவதில்லை, அதற்கு மேலே ஆட்சியில் இருக்கும் பாஜக வேட்பாளருக்கே வாய்ப்பு அளிக்கலாம் எனவும் கூறப்படுகிறது,  திமுக காங்கிரஸ் கூட்டணி பலம் காங்கிரஸ் வேட்பாளருக்கு கை கொடுக்கிறது, அதிமுக வாக்கு வங்கி கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிதாக இல்லாதது கூட்டணி ரீதியாக இந்த மாவட்டத்தில் கை கொடுக்கவில்லை.

இவை தவிர்த்து மத ரீதியாக வாக்குகள் பிரிவதும், பாஜகவிற்கு பின்னடைவாக இருக்கிறது, விஜய் வசந்த் வெற்றி பெற்றால் அது வீண் என பாஜக பிரச்சாரம் செய்வது நகரங்களில் வாழும் கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்களையும் சிந்திக்க வைக்கிறது... கள நிலவரம் என்பது பாஜக காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நிலவுகிறது வெற்றி வாய்ப்பு என்பது 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இருக்க மட்டுமே வாய்ப்புகள் உண்டு.