ஜெயங்கொண்டம் தொகுதியில் காடுவெட்டி குருவிற்கு பிறகு அரியணை ஏறப்போவது யார் வெளியான சர்வே முடிவுகள்!!ஜெயங்கொண்டம் தொகுதியில் காடுவெட்டி குருவிற்கு பிறகு அரியணை ஏறப்போவது யார் வெளியான சர்வே முடிவுகள்!!
ஜெயங்கொண்டம் தொகுதியில் காடுவெட்டி குருவிற்கு பிறகு அரியணை ஏறப்போவது யார் வெளியான சர்வே முடிவுகள்!!

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஏப்ரல் 6, 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2016ஆம் தேர்தலில் 80.75% வாக்கு சதவிகிதம் பதிவாகி இருந்தது. 2016ல் அஇஅதிமுக வேட்பாளர் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஜெ. குரு அவர்களை 22934 வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார். இந்த தொகுதி சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டது.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில், ஜெயங்கொண்டம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு போட்டியிடுகிறார். திமுகவில் கேஎஸ்கே கண்ணனும், அமமுகவில் சிவா, நாம்தமிழர் கட்சியில் நீலமகாலிங்கம் போட்டியிடுகிறார்கள்.மக்கள் நீதிமய்யம் கூட்டணியில் ஐஜேகே கட்சியின் சார்பில் குருவின் மனைவி சொர்ணலதா களம் காண்கிறார்.

மிகவும் விருவிருப்பாக நடைபெறும் தேர்தல் களத்தில் ஜெயங்கொண்டம் தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது, குறிப்பாக பாமக சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் பாலு, 8 வழி சாலை திட்டத்தை நிறுத்த உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியவர், அது மட்டுமல்லாமல் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றவும் கடும் முயற்சி எடுத்தவர் என்ற பெயர் பாலுவிற்கு உள்ளது.

கூட்டணி கட்சிகளான அதிமுக, பாஜகவின் ஒத்துழைப்பும் பாலுவிற்கு கிடைப்பது களத்தில் முன்னணியை கொடுத்துள்ளது, திமுக வேட்பாளரை பொறுத்தவரை அதிகம் தொகுதியில் அறியப்படாதவறாக இருப்பதும், கூட்டணி கட்சிகளுக்கு ஜெயங்கொண்டம் தொகுதியில் செல்வாக்கு இல்லாமல் இருப்பதும் இவருக்கானா பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மேலும் முன்னாள் வன்னியர் சங்க தலைவர் குருவின் மனைவி சொர்ணாலதா  இந்த தேர்தலில் போட்டியிடுவது ஊடகங்களில் பேசுபொருளாக இருக்கிறதே தவிர தொகுதியில் எந்த வித ஆதரவும் அவருக்கு இருப்பதாக தெரியவில்லை, குறிப்பாக ஐஜேகே உடன் இணைந்து அவர் போட்டியிடுவது தொகுதியில் அவர் சார்ந்த சமூகத்தினர் இடையே அதிர்ப்தியை உண்டாக்கியுள்ளது.

இவை தவிர்த்து பாமக வேட்பாளர் பாலுவின் தனிப்பட்ட அணுகுமுறை, கூட்டணி கட்சிகளை இணைத்து தேர்தல் பரப்புரை செய்வது அவருக்கு ஆதரவாக இளைஞர் பட்டாளம் தொகுதியில் அனைத்து பகுதியில் தீயாக வேலை செய்வதும், தொகுதியின் முக்கிய தலைவர்களை சந்தித்து ஆதரவு பெறுவது என பல்வேறு காரணங்கள் பாமாகவிற்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளன.

ஜெயங்கொண்டம் தொகுதியை பொறுத்தமட்டில் தற்போது பாமக வேட்பாளருடன் ஒப்பிடுகையில் திமுக வேட்பாளர் பலத்த பின்னடைவை சந்தித்து வருகிறார், பிரச்சாரம் வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பல இடங்களில் திமுகவினரை தொகுதியில் பார்ப்பதே அறிதாக உள்ளது இவை அனைத்தையும் ஒப்பிடுகையில் தற்போதைய சூழலில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 2011 ம் ஆண்டை போல் பாமகவே வெற்றி பெரும் என்பதே கள நிலவரமாக உள்ளது.

Share at :

Recent posts

View all posts

Reach out