24 special

எவன் அப்பன் வீட்டு காசு….! வசமாக சிக்கிய அறிவாலையம்!

mk stalin, savukku shaker, udhayanithi
mk stalin, savukku shaker, udhayanithi

கடந்த டிசம்பர் மாதத்தில் சென்னையில் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி வடியாமல் மக்களை பெரிதும் பாதித்தது. நிவாரணப் பொருட்களும் மீட்பு நடவடிக்கைகளும் கிடைக்காமல் மக்கள் பெரும் துயரங்களை சந்தித்தனர் இதனால் சென்னை மக்கள் அடைந்த கோபம் தமிழக அரசின் மீது பாய்ந்தது! மக்கள் ஒவ்வொருவரும் கேள்விகளை முன் வைத்தனர் மக்கள் முன்வைத்த கேள்விகளுக்கு மத்திய அரசை குறை கூறுவது போன்று திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை தெரிவித்து வந்தனர். மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசிடம் பணம் கேட்பது போன்று உங்கள் அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம்!  நாங்கள் கொடுத்த வரியை தானே கேட்கிறோம் எங்கள் மக்களை காப்பாற்ற வேண்டும் நீங்கள் பணம் கொடுத்தால் தான் நடக்கும் என்று வகையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசி இருந்தார்.


இவரது பேச்சு தமிழக அரசிடம் நிதியே இல்லை! மழை வருவதற்கு முன்பாகவே மழை நீர் வடிகால் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை மழைக்குறித்த தகவலும் எங்களுக்கு தெரியாது என்ற வகையில் இருந்தது.இதனால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லிக்கு தமிழக செய்தியாளர்களை அழைத்து பேட்டி கொடுத்தார் மழை குறித்த முன்னறிவிப்புகள் முன்கூட்டிய வழங்கப்பட்டது என்றும் தமிழக அரசிடமிருந்து மத்திய அரசுக்கு நிதி கோரி கடிதம் வந்தது அந்த கடிதத்திற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் பொழுது தமிழக முதல்வரும் டெல்லியில் INDI  கூட்டணியுடன் அமர்ந்து ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார், அதற்குப் பிறகு டெல்லிக்கு வந்து விட்டோம் போறப் பொக்கில் பிரதமரை சந்தித்து விடுவோம் என்ற வகையில் இரவில் பிரதமரை சந்தித்து விட்டு சென்றார் முதல்வர்! ஆனால் அதற்கு முன்பாகவே நாங்கள் பணத்தை தமிழக அரசுக்கு வழங்கி விட்டோம்! 

 அதுமட்டுமின்றி தமிழக முதல்வரின் மகனான உதயநிதி ஸ்டாலின் உங்கள் அப்பன் வீட்டு பணத்தையா கேட்டோம் என்று கேட்கிறார்! இப்படி கேட்பவர் அவருடைய அப்பன் வீட்டு பணத்தை வைத்து தான் பதவியை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறாரா? என்று கேட்க முடியுமா! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதை தானே கொடுக்கிறோம் ஆனால் இது போன்ற பேச்சுக்கள் அரசியலில் நல்லதல்ல அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் ஆசைப்படுகிறார் அவர், அதனால் முதலில் அவருக்கு இருக்க வேண்டியது நாவடக்கமே என்று கடுமையாக சாடினார். இந்த நிலையில், தமிழக முதல்வருக்கு புதிதாக ஆறு கருப்பு கலர் இனோவா கார் அரசு தரப்பில் வாங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கூறிய தகவல் வைரல் ஆகி வருகிறது. அதாவது சவுக்கு சங்கரிடம் முதல்வர் அலுவலக அதிகாரிகளிடம் இது குறித்து முதல்வரின் பாதுகாப்புக்கு எதுவும் அச்சுறுத்தலா பாதுகாப்பிற்காக இத்தனை வண்டியா என்று கேட்கப்பட்ட பொழுது பிரதமரை பார்த்து பிரதமரை போன்றே பண்ண வேண்டும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆறு கருப்பு கலர் இனோவா காரை 2 கோடி செலவில் வாங்கி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் எந்த ஒரு காரணம் இன்றி வெட்டியாக பந்தா பண்ணுவதற்காக இந்த காரை வாங்கி உள்ளனர்! மழையால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிகளை சீரமைக்காமல் வாகன தேவைக்கு இரண்டு கோடியா? என்றும் கூறி 6 கருப்பு கலர் காரை பற்றிய உண்மைகளை உடைத்துள்ளார், மேலும் அந்த பேட்டியில் கூறும்போது முதல்வருக்கு சனி பெயர்ச்சி பரிகாரத்திக்காக இந்த 6 கருப்பு கலர் கார் வாங்கப்பட்டுள்ளது எனவும் வேறு கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.