Tamilnadu

எதுக்கு 7 லட்சம் சம்பளம்..6 பொண்டாட்டி கட்டியும் வேஸ்ட் வெளுத்து எடுத்த தமிழ் மணி மிரண்ட தம்பி தமிழரசன்!

Tamilmani and Tamilarasan
Tamilmani and Tamilarasan

முன்னாள் அதிமுக அமைச்சர் அன்பழகன் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை தொடர்ந்து நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி குறிப்பிட்ட தகவல்கள் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது, அதிலும் டிஜிபி குறித்தும் திமுக நிலைப்பாடு குறித்தும் பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


வருமானத்திற்கு அதிகமாக ரூ.11¼ கோடி சொத்து குவித்ததாக கூறப்படும் வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அவருக்கு தொடர்புடைய கோவிந்தசாமி எம்.எல்.ஏ. வீடு உள்பட 58 இடங்களில் இந்த சோதனை நடந்தது.

கடந்த 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். இவர், தற்போது பாலக்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.பி.அன்பழகன் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணை முடிவில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.11 கோடியே 32 லட்சம் சொத்து சேர்த்ததாக கே.பி.அன்பழகன், அவருடைய மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

இதற்கிடையே காரிமங்கலம் கிரகொடஅள்ளியில் உள்ள வீட்டில் நேற்று காலை 6 மணி அளவில் கே.பி.அன்பழகன் அமர்ந்து இருந்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் அதிரடியாக அவரது வீட்டுக்குள் நுழைந்தனர். இதை சற்றும் எதிர்பாராத கே.பி.அன்பழகன் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார், கே.பி.அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் எங்களது விசாரணைக்கும், உங்களது வீட்டில் சோதனை நடத்தவும் ஒத்துழைக்க வேண்டும் என்றனர். அதற்கு எம்.எல்.ஏ. மற்றும் வீட்டில் உள்ளவர்கள் ஒத்துழைப்பு தருவதாக கூறினர்.

உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். அப்போது முக்கியமான சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்கள் தொடர்பாக கே.பி.அன்பழகன், அவரது குடும்பத்தினரிடம் போலீசார் கேட்டறிந்தனர். அவர்கள் அதற்கு பதில் கூறியதாக தெரிகிறது. மேலும் கே.பி.அன்பழகனுக்கு நெருக்கமாக இருந்த நபர்கள், உறவினர்கள், நண்பர்கள் குறித்த விவரங்களையும் கேட்டு துருவி துருவி விசாரணை நடத்தினர்.

கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை குறித்த தகவல் தர்மபுரி மாவட்டத்தில் காட்டுத்தீ போல பரவியது. ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கே.பி.அன்பழகன் வீட்டு முன்பு திரண்டனர். அவர்கள் தி.மு.க. அரசை கண்டித்தும், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். 

மேலும் கே.பி.அன்பழகன் வீட்டுக்குள் அவர்கள் நுழைய முயன்றனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அன்பழகன் வீட்டுக்குள் நுழைய முயன்றவர்களை தடுத்து நிறுத்தியதுடன், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர்.

இதற்கிடையே ஏற்கனவே கே.பி.அன்பழகன் பற்றிய விவரங்களை சேகரித்து வைத்திருந்த போலீசார், அவருக்கு சொந்தமான இடங்கள், அவரது உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான இடங்களிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதுதவிர கே.பி.அன்பழகனுக்கு நெருக்கமானவர் பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி. இலக்கியம்பட்டியில் வசித்து வரும் இவருக்கு சொந்தமான வீடு, அவருடைய சகோதரர் பழனிசாமி வீடு, தர்மபுரி நேருநகரில் உள்ள உதவியாளர் பொன்னுவேல் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகிய 5 பேரது வீடுகள், அவர்கள் தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். தற்போது 6-வது நபராக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன் வீடு உள்பட 58 இடங்களில் நேற்று லசோதனை நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற தமிழ்மணி, இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளால் நடைபெற்றது என்ன மேலும் சில செந்தில் பாலாஜிகள் கிடைப்பார்கள் என எதிர்பார்க்கலாம்,6 முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்?

எந்த அமைச்சரையும் கைது செய்யாதது ஏன்? எதற்கு வெட்டியாக 7 லட்சம் சம்பளத்தில் ஒரு டிஜிபி, இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லாமல் என்ன என வெளுத்து எடுத்துவிட்டார்.

தமிழ்மணி பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது, தமிழ்மணி தனது விவாதத்தை தொடங்கும் முன்னரே நெறியாளர் தம்பி தமிழரசனை சிறிது நேரம் அமைதியாக இருக்கும் படி கூறி விவாதத்தில் பதிலை தொடங்கியது குறிப்பிடத்தக்கது வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.