Tamilnadu

"அமிட்ஷா" ஏன் TR பாலு தலைமையிலான குழுவை சந்திக்க மறுத்தார்? வீட்டு வாசலில் தடுத்தது ஏன் வெளியான பரபரப்பு தகவல்!

TR balu and amithsha
TR balu and amithsha

தமிழகத்தில் இருந்து உள்துறை அமைச்சரை சந்திக்க சென்ற குழுவினரை  உள்துறை அமைச்சர் சந்திக்க மறுத்த சம்பவம் ஊடகங்களில் வெளியான நிலையில் ஏன் என்ற காரணம் வெளியாகத நிலையில் டெல்லியில் இருந்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழக சட்டப்பேரவையில், நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் கோரிக்கை மனுவுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க, திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு நேற்று முன்தினம் டெல்லிக்குச் சென்றது.


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு. வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் செல்வராஜ், ஐயுஎம்எல் உறுப்பினர் நவாஸ் கனி, காங்கிரஸ் உறுப்பினர் ஜெயக்குமார், அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றனர். இக்குழு நேற்று முன் தினம், கொரோனா கட்டுப்பாடு காரணமாகக் குடியரசுத் தலைவரைச் சந்திக்க முடியாமல், தங்களது கோரிக்கை மனுக்களைக் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அவரது செயலாளரிடம் கொடுத்தது.

இந்நிலையில், “நேற்று முன்தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதாக இருந்தது. ஆனால், தமிழக எம்.பிக்களை சந்திக்க அமித் ஷா இசைவு கொடுக்கவில்லை.நேற்று முன்தினம் முழுவதும் டெல்லியில் உள்ள டி.ஆர். பாலு இல்லத்தில் தமிழக எம்.பி.க்கள் காத்திருந்தும் அமித்ஷாவிடம் இருந்து அழைப்பு வரவில்லை.இதையடுத்து தமிழக எம்.பி.க்கள் ஒரு சிலர் மட்டும் அமித்ஷா வீட்டுக்குச் சென்றபோது நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்” என டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு,  நீட் விலக்கு மசோதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய, கோரிக்கை மனு குடியரசுத் தலைவர் தரப்பிடம் கொடுக்கப்பட்ட பிறகு அன்று இரவே பதில் கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், இதன் மற்றொரு நகல் உள்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது என குறிப்பிட்டார்.

இந்த சூழலில் டெல்லியில் உள்துறை அமைச்சரை தமிழக எம். பி கள் சந்திக்க இருந்தது முழுக்க முழுக்க அரசியல் எனவும் வருகின்ற நகராட்சி தேர்தலில் சாக்கு சொல்ல திமுக இந்த வாய்ப்பை பயன்படுத்தும் எனவும் அமிட்ஷா தான் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கும் மசோதாவிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார் என்ற பிம்பத்தை உண்டாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட திமுக முயல்வதாக தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைமை உள்துறை அமைச்சருக்கு தகவல் கொடுத்துள்ளது.

இதையடுத்தே தமிழக எம்.பி கள் குழுவை சந்திக்க உள்துறை அமைச்சர் அமிட்ஷா மறுத்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன, தமிழகத்தில் திமுக அளித்த வாக்குறுதிகள் முக்கியமானவை பலவற்றை அதாவது நீட் தேர்வு ரத்து செய்வோம் உட்பட எதையும் அதனால் செய்ய இயலவில்லை இது திமுகவிற்கு கடும் பின்னடைவாக அமையும் என்பதால் அமிட்ஷா பக்கம் பந்தை பாஸ் செய்ய திமுக குழு முயன்ற நிலையில் வாசலில் வைத்தே தடுத்து அனுப்பி இருக்கின்றனர்.