தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் 2021-ம் ஆண்டின் செயல்பாடு குறித்து எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் கருத்து தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் குறிப்பிட்ட கருத்து பின்வருமாறு :- 2021ல் கவனிக்கபட்ட பல அரசியல்வாதிகளில் முக்கியமானவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,மொத்த இந்தியாவும் அவரை கவனித்தது, 40 வயது கூட நெருங்காத ஒரு ஐபிஎஸ் அதிகாரி அதுவும் கமிஷனர் அளவுக்கு இளம் வயதிலே முன்னெறிய ஒரு திறமை மிக்க அதிகாரி அரசியலுக்கு வந்து மிகபெரும் தேசாபிமான் காரியம் செய்வதெல்லாம் இந்திய அளவில் மிகபெரும் கவனத்தை பெற்றது.
அவர் கடந்த தேர்தலில் வெற்றியினை தவறவிட்டிருக்கலாம் அதெல்லாம் விஷயமில்லை, ஆனானபட்ட காமராஜரே சுதந்திரத்துக்கு முந்தைய உள்ளாட்சி தேர்தல்களில் பின்னடைந்த காலமெல்லாம் உண்டு, அண்ணாமலை சமீபத்தில் வந்தாவர், அவருக்கு தந்தையோ தாத்தாவோ அரசியலில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் இல்லை, அவர் சார்ந்த கட்சியும்.
தமிழகத்தில் மிக செல்வாக்கான கட்சி அல்ல அவ்வகையில் அவர் வெற்றியினை தவறவிட்டது ஆச்சரியமல்ல, அரசியலில் படி படியாக வளர்வதுதான் நல்லது அண்ணாமலை அக்கட்சியின் மாநில தலைவராக உயர்த்தபட்டார் இது அவர்மேல் நம்பிக்கை வைத்து அக்கட்சியின் தலமை எடுத்த முடிவு ,அதை மிக சரியாக செய்கின்றார் அண்ணாமலை, தமிழகத்தின் உண்மையான எதிர்கட்சி தலைவர் அவர்தான் தமிழக பிரதான எதிர்கட்சி தன் கடமையினை செய்யா நிலையில் அதை தோளில் சுமக்கின்றார் அண்ணாமலை, அவரால் ஒரு அதிர்வினை கொடுக்க முடிகின்றது, மிக சரியான கருத்துக்கள், தெளிவான பேச்சு, தைரியமாக மனதில் பட்டதை சொல்லும் பாங்கு, சர்ச்சைகளிலோ இதர சமரங்களிலோ ஈடுபடா பக்குவம் என மக்கள் மனதில் அவர் வளர்ந்து கொண்டிருக்கின்றார்.
ஊழலுக்கு பெயர்போன தமிழகத்தில் அவரின் எச்சரிக்கையும் அது தொடர்பான பேட்டிகளும் ஓரளவு நல்வினையினை கொடுக்கின்றன, பல விஷயங்கள் மக்கள் மன்றத்துக்கு அவரால் இழுத்துவரபடுகின்றன, மிகசிறந்த எதிர்சக்தியாக அவர் தமிழக அரசியலில் வலம்வர ஆரம்பித்துவிட்டார், மவுனமாக மிகபெரும் வரவேற்பு மக்கள் மனங்களில் அவருக்கு கிடைத்து கொண்டிருக்கின்றது தமிழகத்தின் அடுத்த தலைமுறை அரசியல் கற்றவர்களாலும், நாட்டுபற்றும் கடமை உணர்வும் கொண்டவர்களாலும் நடத்தபடும் என்பது அவருக்கு கிடைக்கும் வரவேற்பில் தெரிகின்றது, கற்ற தலைமுறை அரசியலுக்கு வந்தால் என்னென்ன மாற்றம் நிகழும் என்பதை காட்டி கொண்டிருக்கின்றார் அண்ணாமலை.
அவருக்கு பின்னால் அணிதிரளும் இளைஞர் கூட்டமும் அதைத்தான் சொல்கின்றது, காலம் காலமாக இங்கு வஞ்சிக்கபட்ட இந்துக்களுக்கும், சுமார் 300 ஆண்டுகாலம் மிக மோசமாக தாழ்த்தபட்ட இந்துக்களுக்கும் இந்து ஆலயங்களுக்குமான விடிவெள்ளியாக அவர்தான் பார்க்கபடுகின்றார் மீடியா மாபியா கொண்ட தமிழகத்தில், தேசாபிமானிகள் முழ்வதுமாக மறைக்கபடும் தமிழகத்தில் அந்த பெரும் சதியினை மீறி அவர் வளர்ந்துகொண்டிருப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல, 2021ம் ஆண்டு எதிர்கால தமிழக அரசியலை நிர்ணயிக்கும் சக்தி கொண்டவர் என அவரை அடையாளம் காட்டியிருக்கின்றது, அவரின் தேசாபிமான பணிகள் மென்மேலும் வருங்காலங்களில் வளர எல்லா தெய்வங்களும் பரம்பொருளும் வரம் அருளட்டும் என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன் .