இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது, இங்கிலாந்து நாட்டிலே கிஸாஸ்கோ நகரத்திலே நடந்த COP26 மாநாட்டிலே மூன்று நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கு மட்டும் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.மற்ற உலக நாட்டினை சேர்ந்த தலைவர்கள் எல்லாம் ஒரே இடத்திலே தங்கவும் பேருந்துகளிலே ஒன்றாக அழைத்து வரவும் செய்யப்பட்டபோது
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மாநாட்டை நடத்திய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பாரத பிரதமர் மோடி ஆகியோர் மட்டும் தனியே ஹோட்டல்களிலே தங்கிக்கொள்ளவும் பாதுகாப்பு கார்கள் புடை சூழ அழைத்து வரப்பட்டனர்.
இது அங்கு இருந்த உலக நாடுகளின் தலைவர்கள் சிலரை புருவத்தை உயர செய்தது, இதை பார்த்து கொந்தளித்த துருக்கி நாட்டின் அதிபர் என்ரோகான் இந்திய பிரதமருக்கு மட்டும் ஏன் சிறப்பு மரியாதைய என சொல்லி மாநாட்டிற்கு வருவதை புறக்கணித்துள்ளார்.
நிகழ்ச்சியை நடத்தும் நாடான இங்கிலாத்திற்கு கார் அணிவகுப்பு சரி, அமெரிக்க அதிபருக்கும் சரி ஏன் இப்போது இந்திய பிரதமருக்கு சிறப்பு மரியாதை என கேட்டதற்கு மிரள வைக்கும் பதில் கிடைத்துள்ளது.
இதற்கு பிரதமர் மோடி செய்திருக்கும் அளப்பரிய செயல்களுக்காக என அந்த மாநாட்டு நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்கள். அந்த மாநாட்டிற்கு சில நாட்கள் பிறகு இந்தியாவின் தலைமையிலே இயங்கும் உலக சூரியஒளிசக்தி கூட்டமைப்பிலே அமெரிக்கா 101 ஆவது நாடாக சேர்ந்தது.
இந்தியாவின் அமைச்சர்கள் தான் அந்த பருவநிலை மாற்ற மாநாட்டிலே இறுதி ஒப்பந்தத்தை முன்னெடுத்தார்கள். மொத்தத்தில் பாரத பிரதமர் மோடி தனது திறமை மற்றும் அலப்பரிய முயற்சியால் இந்தியாவின் மதிப்பை உயர்த்தி இருக்கிறார்.இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.