எந்த ஒரு இந்திய பிரதமருக்கும் இல்லாத ஆளுமை திறன் தற்போது உலக அளவில் நம் பாரத பிரதமருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை G20 கூட்டத்தில் நன்றாகவே வெளிப்படையாக பலரும் பார்த்திருக்கலாம்.இது ஒரு புறம் இருக்க அமெரிக்காவின் எந்த ஒரு அதிபருக்கும் இல்லாத செல்வாக்கு சரிவு ஜோபைடனுக்கு ஏற்பட்டிருக்கிறது .
சமீபத்தில் நடந்து முடிந்த கருத்து கணிப்பில் அவரது செல்வாக்கு ஒற்றை இலக்கத்திற்கு தள்ளப் பட்டிருக்கிறது.இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருக்கு வேறோர் இடத்தில் இருந்து புதியதாக சிக்கல் முளைத்திருக்கிறது. அதுவும் ஸிகார் மூலமாக அதாவது SIGAR என்பதின் விரிவாக்கம் Special Inspector General for Afghanistan Reconstruction..இதன் தற்போதைய தலைவராக ஜான் F ஸ்போக்கோ என்பவர் இருக்கிறார். இவர் தான் பைடனை கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடித்து கொண்டு இருக்கிறார் .
அங்கு எதன் அடிப்படையில் ஆஃப்கானிஸ்தானில் இருந்து படை விலகலை உறுதி செய்தீர்கள்???? அங்கு பாதுகாப்பான ஆஃப்கன் அரசு அஷ்ரப் க்யானி தலைமையில் தொடரும் என பென்டகன் எழுதுமூலமாக உறுதி அளித்தை எந்த விதத்தில் ஆமோதித்தீர்கள்???? அமெரிக்க படைகளை அங்கு இருந்து அவசர அவசரமாக வெளியேற்ற என்ன காரணம்???? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அதிரடித்திருக்கிறார் அவர்.
அமெரிக்க செனட் சபையில் இது விவாதத்திற்கு வருமானால் ஜோபைடனின் சிண்டை பிடித்து உலுக்கி விட அவரது கட்சியினரே தயாராக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த இருபது ஆண்டு கால அளவில் ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கா மாத்திரமே சுமார் 2000 கோடி டாலர்களை செலவு செய்து இருக்கிறது என்று அதிர்ச்சி அளித்திருக்கிறார்கள் அங்குள்ள கணக்கு தணிக்கை குழு தலைவர்.
இதில் சுமார் 150 கோடி டாலர்கள் மதிப்புடைய பொருட்களை வேறு அங்கேயே விட்டுவிட்டு ஓடி வந்திருக்கிறார்கள் அமெரிக்க ராணுவத்தினர் என்று கடிந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள். இது ஒரு தனி மனிதனை ஒஸாமா பின் லாடனை வேட்டை ஆட செலவு செய்யப்பட்ட தொகையா என பலரும் தற்போது கொந்தளிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இது அத்தனையும் பைடன் தலையில் வந்து விடிந்திருக்கிறது. அவ்வளவும் அமெரிக்க மக்களின் வரிப் பணம். அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டார்கள் அங்கு . செனட் சபை உறுப்பினர்கள் கூட்டு கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்க படும் பொழுது ஸ்பெஷல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பார் ஆஃப்கானிஸ்தான் ரீகன்ஸ்டரக்ஷன் தலைவர் ஜான் F ஸ்போக்கோவின் அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும். அந்த சமயத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியே இருந்து ஜோபைடனுக்கு குடைச்சல் கொடுத்தால் பெரும் திண்டாட்டமாகி விடும் என்கிறார்கள்.
இந்த ஒரு தருணத்திற்காக தான் டிரம்பும் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார் என்பது வேறு சமாச்சாரம். இதனை தடுக்க இந்திய பிரதமரின் உதவி கோர முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதன் பொருட்டே G20 உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பாரதப் பிரதமரிடம் ஜோபைடன் மிகவும் நெருக்கம் காட்டியதாக புலனாய்வு ஊடகங்கள் செய்தி சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் அங்கு , அதாவது இவர் மூலமாக டொனால்ட் ட்ரம்ப்க்கு தூது செல்ல ஆயத்தமாகி வருகிறது பைடன் தரப்பு. ட்ரம்பிற்கு அமைதியாக செல்வதினால் என்ன லாபம் .
அமெரிக்க அதிபராக ஒருவர் இரண்டுமுறை பதவியில் இருக்கலாம் , ஆனால் டிரம்ப் ஒருமுறை மட்டுமே பதவியில் இருந்துள்ளார் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட அமெரிக்க சட்டத்தில் இடம் உள்ளது , அதே நேரத்தில் ஜோ பைடன் வெற்றிபெற்ற அன்று அமெரிக்க தலைநகரில் உண்டான கலவரத்தை வைத்து ட்ரம்பை தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க ஜோ பைடன் கட்சியினர் வேலை செய்து வருகின்றனர் .
இதை தற்போது நிறுத்த ஜோ பைடன் தரப்பு முடிவு செய்துள்ளதாக மோடி மூலம் தகவலை பரிமாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது , பிரதமர் மோடி ட்ரம்பிற்காக அமெரிக்கா சென்று ஹௌடி மோடி எனும் பெரும் நிகழ்ச்சியை நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .இதே பைடன் தான் தேர்தல் சமயத்தில் எதனை எல்லாம் ட்ரம்பின் நிர்வாக தோல்வி அமெரிக்காவை வழி நடத்த தகுதியற்றவர் என்று குற்றம் சாட்டியிருந்தாரோ.அதே விஷயங்கள் தான் பைடனுக்கு அங்கு தற்போது ஏற்பட்டுள்ளது.
தவிர அமெரிக்க அதிபர் தேர்தலில் போது இந்தியர்கள் அதிக அளவில் வாக்களித்து தான் ஜோபைடன் அதிபராக வெற்றி பெற முடிந்தது. தவிர இந்தியர்களை கவரவே இந்திய வம்சாவழியை சேர்ந்த கலப்பின கருப்பின பெண் கமலா ஹாரீஸ் முன்னிலை படுத்தப்பட்டார் என்கிறார்கள்.
தற்போது உள்ள சூழ்நிலையில் அமெரிக்க சபையில் ஆப்கானிஸ்தான் விவாதம் நடந்து உச்ச பட்சமாக ஜோபைடன் பதவியிறக்கம் செய்யப்படும் பட்சத்தில் கமலா ஹாரீஸ் அதிபராக செயல்படும் அதிகாரம் கொண்டவராக இருப்பார் என்கிறார்கள். அது அத்தனை சுலபமான நடைமுறை சாத்தியம் அல்ல என்றும் ஒரு சாரார் காரசாரமாக விவாதம் செய்து கொண்டு இருக்கிறார்கள், ஒரு கட்டத்தில் ஏன் கருப்பின பெண் ஒருவர் அமெரிக்காவின் அதிபராக முடியாதா என்கிற ரீதியிலான கேள்விகள் எழுந்துள்ளன என்பதெல்லாம் வேறு விஷயம்.
இப்படி ஒரு இடியாப்ப சிக்கலில் ஜோ பைடன் தத்தளித்து தடுமாறி வரும் சூழலில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா S400 வாங்கியதற்காக பொருளாதார தடையை அமெரிக்கா கொண்டு வர போகிறார்களா என்ன என்று ஏளனம் செய்து கொண்டு இருக்கிறார்கள் சிலர். ஏனெனில் இந்தியா மீது நடவடிக்கை எடுத்தால் அது தற்போது உள்ள நிலைமையில் ஜோபைடனுக்கு மேலும் சிக்கலாகி விடும்.
நடவடிக்கை எடுக்காமல் அப்படியே விட்டு விட்டால் அமெரிக்கா இந்தியாவிடம் அடிபணிந்து விட்டதாக உலக நாடுகள் நையாண்டி செய்ய தொடங்கி விடுவார்கள் என்கிறார்கள் உலக அரசியல் பார்வையாளர்கள். மொத்தத்தில் இதுவரை இந்திய அரசியலில் அமெரிக்க அதிபர்கள் தலையீடு இருந்த காலம் மாறி அமெரிக்க அரசியலில் இந்திய பிரதமர் ஒருவர் தலையிடும் வகையில் உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் விரிவடைந்து கொண்டே வருகிறது என்பதை நம் கண்கூடாக பார்க்க முடிகிறது இதற்கு மோடியின் கடின உழைப்பே சாத்தியமாக பார்க்கப்படுகிறது .