சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுவான செனட் சபை கூட்டம் துணைவேந்தர் தலைமையில் நடைபெற்றது, இதில் துணைவேந்தர் கௌரி சட்ட சபையின் பிரதிநிதியாக தமிழக எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி இன்னும் பல பேராசிரியர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, சென்னை பல்கலைக்கழகத்தை சர்வதேச அளவில் சிறந்த பல்கலைக்கழகமாக மாற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் உதவுவார் எனவும் அதற்கான திட்டங்களை அவரிடம் எடுத்துச் செல்வேன் எனவும் கூறி பேசினார்,
இதன் பிறகு பேசிய துணைவேந்தர் கவுரி, சென்னை பல்கலைக்கழகத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, சென்னை பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் கொடுக்கவே வேறு சில திட்டங்களின் பணத்தையும் செலவு செய்ய வேண்டியுள்ளது, கல்வி போன்ற திட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை பல்கலைக்கழகத்தின் நிதி நிலைமையை கண்டறிந்து உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்த கூட்டத்தில் செனட் உறுப்பினராக பங்கேற்றுள்ள, தி.மு.க., - எம்.எல்.ஏ., மூர்த்தி, அரசு தரப்பில் இதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என, எதிர்பார்க்கிறோம் எனவும் கவுரி பேசினார்.அப்போது, பேராசிரியர் மணிவாசகம் என்பவர் எழுந்து, தமிழக முதல்வரை புகழ்கிறார்கள் ஆனால் அவரது புகைப்படத்தை பல்கலைக்கழகத்தின் எந்த இடத்திலும் நீங்கள் வைக்கவில்லை , இதற்கு பதில் கொடுத்த துணைவேந்தர் முதல்வரின் சிறப்பான கல்விப் பணிகளை பாராட்டினேன் தனிப்பட்ட முறையில் அல்ல, முதல்வர் படம் இடம் பெறாதது எனக்கும் வருத்தம்தான்,
ஆனால் பல்கலைக்கழக சட்ட விதிகளின்படி முதல்வரின் புகைப்படத்தை சென்னை பல்கலைக்கழகத்தின் உள்ளே வைக்க முடியாது எனவே தான் அவரது படத்தை வைக்க அனுமதி இல்லை என தெரிவித்ததாக கூறினார். இதன்பிறகு கேள்வி கேட்ட பேராசிரியர் மணிவாசகம் அமைதியானார்.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவது என்பது குறிப்பிடத்தக்கது ஆளுநரை பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆளுநர் தான் தமிழகத்தில் செயல்படும் பல்கலைக்கழகங்களின் வேந்தர்களை நியமிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.