Cinema

இதே "வேலையாக போச்சு" போட்டு தாக்கிய நடிகர் தீனா ! வாயடைத்து போன உடன்பிறப்புகள்!

stalin and actor deena
stalin and actor deena

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 


இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி காலையில் அங்கு குடியிருந்து வந்த பா.ம.க. பிரமுகர் கண்ணையன் தீக்குளித்தார். இதில் உடல் கருகிய நிலையில் அவர் உயிருக்கு போராடிய வீடியோ வெளியானது.  பலத்த காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்ட கண்ணையனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கண்ணையன்  பரிதாபமாக உயிரிழந்தார். உயிர் இழப்பதற்கு முன்பு கண்ணயன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தை கையில் எடுத்து பேச வேண்டும் அண்ணாமலை செய்வார் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்த பின்பு தற்கொலை செய்து கொண்டது பெரும் வேதனை தரும் நிகழ்வாக மாறியது.

உயிரிழந்த கண்ணயனுக்கு  மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர்.  இருவருக்கும் திருமணமாகி விட்டது. இவர் அப்பகுதியில் செங்கல், மணல் வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்தார், இந்த விவகாரம் குறித்து தனியார் யூடுப் சேனலில் விவாதம் நடைபெற்றது விவாதத்தின் ஒரு பகுதியாக நடிகர் தீனா கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் சேரி வசதி இல்லாதவர் வீடுகளை இடிக்கும் அரசாங்கம் ஏன் மற்ற பகுதிகளை இடிக்க மறுக்கிறார்கள், எங்களை எங்கோ ஒரு மூலையில் தூக்கி போட்டு மீண்டும் பழைய நிலைக்கு தள்ளி விடுகிறார்கள், நாங்கள் பூர்வ குடி இல்லை சார் அடிமை குடி என பெரும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் தீனா.தொடர்ச்சியாக ஆளும் திமுக பல தரப்பிலும் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருவது இதன் மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.