சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநில தலைவர் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் அண்ணனுக்கு அமைச்சர் பதவி கொடுக்குறதுக்கு தான் ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறம் 100 கோடி செலவு பண்ணி 3 படம் எடுத்தாங்களா?. ஒரு தலைவன் உருவாவது என்பது மக்களுடைய அன்பு, அரவணைப்பு உடன் மக்களுக்காக உருவாக வேண்டும். யாரையும் கட்டாயப்படுத்தி தலைவன் ஆக்க முடியாது. அப்படி செஞ்சால் அது ஜனநாயகத்திற்கு ஏற்புடையது அல்லது.
ஆனால் அதே சமயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர், மக்கள் பிரதிநிதியான அவர் யாரை வேண்டுமானாலும் அமைச்சர் ஆக்க உரிமையுள்ளது. அதேபோல் எல்லாரையும் தலைவர் ஆக்குவார்களா?, தொண்டர்கள் அனைவருக்கும் பதவி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.
இந்தியாவிலேயே பெஸ்ட் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தான்னு ஒரு அமைச்சர் சொல்லியிருக்காரு. நான் முத்துசாமி அண்ணானைப் பார்த்து கேட்கப்போறேன் ‘நீங்க கும்மிடிப்பூண்டியை தாண்டியிருக்கீங்களா?’. நீங்க கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் எல்லாம் வந்து பார்த்தீங்களா?. தமிழ்நாட்டுக்குள்ளேயே சுத்திட்டு, உதயநிதி ஸ்டாலினைப் பார்த்து கும்பிடு போட்டுக்கிட்டு இருக்குற நீங்க, உதயநிதியை பெஸ்ட் எம்.எல்.ஏ.ன்னு சொன்னா மக்கள் சிரிக்கிறீங்க என்றார்.
திமுகவில் இருக்குறவங்க உதயநிதியை அமைச்சர் ஆக்குங்க அதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு. ஆனால் உதயநிதி அடுத்த தலைவர், அவர் தான் சிறந்த எம்.எல்.ஏ என்றெல்லாம் சொல்வது வேடிக்கையாக உள்ளது என நிதனாமாக பதிலளித்தார்.
இதற்கு முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கூட உதயநிதியை அமைச்சர் ஆக்குவது குறித்த கேள்விக்கு காரசாரமாக கழுவி ஊற்றியிருந்த நிலையில், ‘நாலே வார்த்தை சொன்னாலும் என் தலைவன் நச்சென சொல்லியிருக்கார்’ என பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு காரணம் உதயநிதி குறித்த கேள்விக்கு சிறிதும் கோபப்படாமல் முகம் முழுவதும் சிரிப்புடன் அண்ணாமலை கொடுத்த பதிலடி செய்தியாளர்களைக்கூட வெகுவாக கவர்ந்திருந்தது தான்.
- அன்னக்கிளி