தைரியமாக நொய்டாவில் கால் வைத்த முதல் உ.பி முதல்வர் யோகி ! மாறுமா சாபம்?yogi
yogi

நொய்டாவில் 1988 பிறகு இதுவரை உத்திரபிரதேச முதல்வர்கள் யாருமே நேரடியாக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக பெரிய வரலாறு இல்லை குறிப்பாக தமிழகத்தில் தஞ்சை பெரிய கோவிலுக்கு எப்படி எந்த தமிழக முதல்வர்களும் ஆட்சியில் இருக்கும் போது செல்ல மாட்டார்களோ? அது போல் உத்திர பிரதேச மாநிலத்தில் நொய்டா மண்ணில் கால் வைக்க மாட்டார்கள்.

இந்தமுறை அந்த வழக்கத்தை மாற்றியுள்ளார் யோகி ஆதித்யநாத், இது குறித்து பூமா குமாரி அவர்கள் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-நொய்டா விமான தளத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர். தைரியமாக இந்த முடிவை எடுத்து அந்த விழாவில் பங்கு கொண்டார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உண்மையில் சொல்லப்போனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்த முதல்வர்களுமே நொய்டா வரமாட்டார்கள். ஏனெனில் நொய்டாவிற்கு வந்தால், அந்த மண்ணில் கால் பதித்தால் முதல்வர் பதவி பறிபோய்விடும் என்பது உத்தரபிரதேச மாநில அரசியல்வாதிகளின் நம்பிக்கை. 

சொல்லப்போனால் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபொழுது ஐந்து வருடங்களில் ஒருமுறைகூட நொய்டா மண்ணில் கால் பதிக்கவில்லை. ஆனால் கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸ் காரர்களும் அவரை நவீனமானவர் போலவும் பாரதிய ஜனதா கட்சி ஆட்கள்தான் மூட நம்பிக்கையை பரப்புபவர்கள் என்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். அந்த பிம்பம் இனியாவது  நொறுங்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் பூமா குமாரி.

உத்திர பிரதேச வரலாற்றில் தொடர்ச்சியாக ஒருவர் இரண்டாவது முறை ஆட்சி அமைத்தது இல்லை என்ற சமீபத்திய வரலாறும் உள்ளது அப்படி இருக்கையில் மீண்டும் யோகி வெற்றி பெறுவாரா? என்ற பல கேள்விகள் அடுத்தடுத்து எழும் சூழலில் எதிர் வரும் உத்திர பிரதேச மாநில தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.

Share at :

Recent posts

View all posts

Reach out